மரண மாஸான ஓவியாவின் ஷட் அப் பண்ணுங்க டயலாக்... யுவன் சங்கர் ராஜா என்ன செய்யப்போகிறார் பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக்பாஸ் போட்டியாளர் நடிகை ஓவியாவின் 'ஷட் அப் பண்ணுங்க' டயலாக்கை பாடலாக இசையமைத்து வெளியிடப் போவதாக யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் நடிவை ஓவியா. பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளரில் ஓவியாவின் பெயரை பரிந்துரைக்க சக போட்டியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஓவியாவை காப்பாற்ற வேண்டும், அவரை ஷோவில் இருந்து நீக்கக் கூடாது என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்வதால் ஓவியாவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காப்பாற்றிய ரசிகர்கள்

காப்பாற்றிய ரசிகர்கள்

கடந்த முறை ஓவியாவை காப்பாற்ற ஒன்றரை கோடி ஓட்டு போடப்பட்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று நடக்கும் வெளியேற்றத்தில் இருந்து ஓவியா காப்பாற்றப்பட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸால் பிரபலம்

பிக்பாஸால் பிரபலம்

களவாணி, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்த போது இருந்த மவுசை விட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளா ஓவியா. ரசிகர் மன்றங்கள் தொடங்கியதோடு பலரின் புரொபைல் பிச்சராகவும் ஓவியா மாறியுள்ளார்.

ஷட் அப் பண்ணுங்க டயலாக்

ஷட் அப் பண்ணுங்க டயலாக்

இதனிடையே ஓவியா ஸ்நேகன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோரிடையேயான விவாதத்தின் போது ஷட் அப் பண்ணுங்க என்று ஓவியா சொன்ன டயலாக் பிரபலமாகியுள்ளது. அந்த டயலாக்கை வைத்து யுவன் ஷங்கர் ராஜா பாடல் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் பரவின.

புரமோ பாடலாகிறது

புரமோ பாடலாகிறது

இந்நிலையில் இதனை அதிகாரப்பூர்வமாக யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளார். ஜெய், அஞ்சலி நடிக்கும் பலூன் படத்தின் ப்ரமோ பாடலில் இந்த டயலாக்கை வைத்து பாடல் இசையமைக்கப்பட உள்ளதாக யுவன் கூறியுள்ளார். ஓவியாவிற்கு இந்தப் பாடலை சமர்பிப்பதாக யுவன் கூறியுள்ளது ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Yuvan shankar raja announced that Oviya's famous dialogue Shut up is going to become a promo song for Ballon film which will be dedicated to her.
Please Wait while comments are loading...