For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிபத்து: வகுப்பறையை பூட்டிய ஆசிரியை தேவி விடுதலையா? பெற்றோர் ஆவேசம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: கும்பகோணம் பள்ளி தீவிபத்தில், வகுப்பறையை பூட்டிச் சென்ற ஆசிரியை தேவி, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் மிகுந்த ஆவேசம் அடைந்துள்ளனர்.

கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் நடந்த தீவிபத்து தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த 11 பேரில் ஆசிரியை தேவியும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Parents want to punish Teacher Devi who abandoned the kids in Kumbakonam fire tragedy

இது குழந்தைகளை இழந்த பெற்றோர்களை ஆவேசப்படுத்தியுள்ளது. அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

  • பள்ளியில் தீவிபத்து நடப்பதற்கு முன்பாக, ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஆசிரியை தேவி, வகுப்பறையை பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளார்.
  • அவர் வகுப்பறையை பூட்டிச் செல்லாமல் இருந்திருந்தால் பல குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது பெற்றோர்களின் ஆதங்கமாகும்.
  • பள்ளி தீவிபத்துக்கு பள்ளி நிர்வாகம், கல்வித்துறை மற்றும் நகராட்சித் துறையினரின் அலட்சியப்போக்கே காரணம்.
  • தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இந்த தீர்ப்பு அமையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், 11 பேரை விடுவித்து கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, ஏமாற்றமும் மனவேதனையும் அளிப்பதாக உள்ளது.
  • குற்றம் சாட்டப்பட்ட 21 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும். தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

English summary
Parents of the Kumbakonam fire tragedy victims have demanded to punish teacher Devi, who abandoned the kids during the fire and escaped she alone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X