For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

406 பள்ளிகள்... 91.09 % தேர்ச்சி... இது சென்னை பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 2 தேர்வில் சென்னை பள்ளிகளில் 91.09% மாணவ -மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் வெளியிடப்பட்டது.

Passout percentage in Chennai is 91.09%

அதன்படி, ஈரோடு மாவட்டம் 97.5 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. 91.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது தமிழகத்தின் தலைநகரமான சென்னை.

இது தொடர்பான மேலும் விவரங்கள் பின்வருமாறு:

தேர்ச்சி அளவு...

சென்னையில் உள்ள 406 பள்ளிகளில் மொத்தம் 53 ஆயிரத்து 73 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 48,776 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

பெண்களே அதிகம்...

அதில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் பெண்கள் 93.39% ஆண்கள் 85.75% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதலிடத்தில் 4 பேர்...

4 மாணவர்கள் 1185 மதிப்பெண்களைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர். வரிசைப்படி, அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ப்ரீத்தி, டிஏவி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அறிவரசி, மதுமிதா மற்றும் பி.ஏ.கே பழனிச்சாமி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீநாத் ஆகியோர் முதலிடத்தைப் பெற்ற மாணவர்கள் ஆவர்.

2ம் இடத்தில்...

டிஏவி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மனீஷா, கே.சி.எஸ்.என்.உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ப்ரவீண் சாய்ராம் ஆகியோர் 1183 மதிப்பெண்களைப் பெற்று 2ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

3வது இடத்தில்...

மூன்றாமிடத்தை 1182 மதிப்பெண்களைப் பெற்று முருகா டிஜி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சரஸ்வதி பெற்றுள்ளார்.

English summary
In plus 2 exams, Chennai gets 91.09 percentage of pass out this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X