ஸ்லோ பாய்சன் போல ஏறும் பெட்ரோல் விலை... 2 மாதத்தில் ரூ. 6 உயர்வு, டீசல் விலையும் விர்ர்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பெட்ரோல் விலை ஸ்லோ பாய்சன் போல கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இன்று ஒரு லிட்டர் ரூ. 73ஐ எட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலையை அதிகரிக்கும் உரிமை கடந்த 2010ம் ஆண்டும், டீசல் விலையை உயர்த்திக் கொள்ளும் உரிமை கடந்த 2014ம் ஆண்டும் எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை அதாவது மாதத்தின் முதல் நாள் மற்றும் 15ம் தேதியில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வந்தன.

இந்நிலையில் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை மே மாதத்தில் நாட்டின் முக்கிய 5 நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி முதல் தங்கம்,வெள்ளி விலை நிலவரம் போல பெட்ரோல், டீசல் விலையும் நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்தில் தமிழகத்தில் ரூ.65.46க்கு விற்கப்பட்ட பெட்ரோலின் விலை படிப்படியாக உயர்ந்து 2 மாதத்தில் இன்று ரூ.72.95ஆக உள்ளது.

ஜூலையில் ஏறத் தொடங்கிய விலை

ஜூலையில் ஏறத் தொடங்கிய விலை

இதே போன்று டீசலின் விலையும் ரூ.56.13ல் இருந்தது தற்போது ரூ. 61.84க்கு விற்கப்படுகிறது. நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படும் முறை நடைமுறையில் வந்ததில் இருந்து சில பைசாக்களில் மட்டுமே விலை குறைவு இருந்துள்ளன. ஜூலை 16 முதல் இந்த கணக்கை எடுத்தால் ரூ. 66.57 ஆக இருந்த பெட்ரோல் விலை அந்த மாதத்தில் மட்டும் ரூ. 1.21 வரை அதிகரித்திருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 70 ஐ தொட்டது

ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 70 ஐ தொட்டது

இதே போன்று ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ரூ. 3.95 காசுகள் அதிகரித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ரூ. 67.71 ஆக இருந்த பெட்ரோல் விலை மாத இறுதியில் ரூ. 71.66 ஆக உயர்ந்துள்ளது.

விர்ரென தொடர்ந்து ஏற்றம்

விர்ரென தொடர்ந்து ஏற்றம்

செப்டம்பர் மாதத்திலும் இதே போன்று ரூ 1.17 காசுகள் வரை பெட்ரோல் விலை நாள்தோறும் ஸ்லோ பாய்சன் போல கொஞ்சம் கொஞ்சமாக ஏறியுள்ளது மாத தொடக்கத்தில் ரூ. 71.78 காசுகளாக இருந்தது இன்று ரூ.72.95ஆக உள்ளது. மொத்தத்தில் பெட்ரோல் விலை இந்த இரண்டு மாதத்தில் மட்டும் ரூ. 6.33 காசுகள் அதிகரித்துள்ளன.

டீசல் விலையும் ராக்கெட்டில் போகிறது

டீசல் விலையும் ராக்கெட்டில் போகிறது

இதே போன்று டீசல் விலையும் ஜூலை 16 முதல் இறுதி வரை 0.61 காசுகளும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 1.57 காசுகளும், செப்டம்பர் மாதத்தில் ரூ. 1.7 காசுகளும் என 2 மாதங்களில் மொத்தம் ரூ. 3.88 காசுகளாக உள்ளன. ஜூலை 16ம் தேதி ரூ. 57.92 காசுகளாக இருந்த டீசல் விலை இன்று ரூ. 61.84 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கெட்டை பதம் பார்க்கும் விலை உயர்வு

பாக்கெட்டை பதம் பார்க்கும் விலை உயர்வு

தினசரி விலை நிர்ணயத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சகமாக அதிகரித்து தற்போது 73 ரூபாயை தொட்டுள்ள பெட்ரோலின் விலையும் ரூ. 62 ஐ தொட்டுள்ள டீசலின் விலையும் வாகன ஓட்டிகளை அச்சமடைய வைத்துள்ளது. இது விலைஉயர்வால் மாதந்தோறும் குடும்ப பட்ஜெட்டில் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Petrol price up by Rs. 6.33 and Diesel rates increased by Rs. 3.88 within 2 months of period as the rates were fixing day to day implementation.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற