For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போன், சிலிண்டர் போல் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வரும் பெட்ரோல், டீசல்

ஆன் லைன் மூலம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்யும் வசதி விரைவில் தொடங்கப்படும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்யும் வசதி தொடங்கப்படவுள்ளது.

துணி மணிகள், காய்கறிகள், செல்போன், எலக்ட்ரிக்கல் பொருள்கள் உள்ளிட்டவை தற்போது ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீடு தேடி வருகின்றன. அதேபோல் சிலிண்டரும் போன் செய்தாலோ, அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்தாலோ வீடு தேடி வருகிறது.

Petroleum ministry will soon start online sale for Petrol and Diesel

அதுபோல் பெட்ரோல் மற்றும் டீசலையும் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் திட்டம் குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் கூறுகையில், சிலிண்டர் உள்ளிட்டவை போல் பெட்ரோல, டீசலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்டுத்திக் கொண்டு இந்த புதியதொரு திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டரை மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகின்றன. மேலும் அன்றாடம் அவற்றின் விலையும் மாறுபடுகிறது குறிப்பிடத்தக்கது.

English summary
Petroleum and Natural Gas Minister Dharmendra Pradhan says that using the technological advancements in the IT & Telecom Sector his ministry will soon be starting online home delivery of Diesel & Petrol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X