For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூரில் சுதந்திரமாக சுற்றித் திரியும் பன்றிகள்.. பன்றிக் காய்ச்சல் பீதியில் மக்கள்!

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்டத்தில் கட்டுக்கடங்காத அளவுக்கு பன்றிகள் சுற்றித் திரிவதால், சுகாதார கேடு அபாயத்தில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். பன்றிகளைக் கட்டுப்படுத்தக் கோரி அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியம், கோயம்பள்ளி ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பன்றிகளினாலும் அதனால் ஏற்படும் தொல்லைகளால் இப்பகுதி மக்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர்.

Pigs make menace in Karur

இப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். மேலும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து கோயம்பள்ளி அரசு பள்ளிக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.

இப்படியிருக்க ஒரு சிலர் இறைச்சிக்காக பன்றிகளை திறந்த வெளியில் வளர்த்து வருகின்றனர். மேலும் பன்றிகளை பட்டியில் அடைத்து வளர்த்து வராமல் திறந்த வெளியில் வளர்ப்பதனால் கால்நடைகளுக்கு வைக்கப்படும் தீவனங்களையும், கலணி நீரையும் பன்றிகள் குடித்து விடுகின்றன. இதனால் கால்நடைகளுக்கு ஒரு விதமான நோய்களும் ஏற்படுகின்றன.

இது மட்டுமில்லாமல் பன்றிகள் தெரு ஒரம் உள்ள சாக்கடைகளில் அழைந்து திரிவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கின்றன. கால்நடைகளுக்கு நோய்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒருவிதமான கொசுவினால் காய்ச்சல் என ஏராளாமான நோய்களை பரப்பி வரும் இந்த பன்றி வளர்ப்பவர்களை பஞ்சாயத்து நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இது வரை நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வருவதால் தற்போது அதிகரித்து வரும் மூளைக்காய்ச்சல் நோய் உருவாகும் அபாய நிலையும் இங்கு ஏற்பட்டுள்ளது.

இது தவிர ஊர்பகுதிகளில் உள்ள மக்களையும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளையும் இந்த பன்றிகள் கடித்து வருவதால் ஒரு விதமான நோய் தாக்குதலுக்கு உண்டாகின்றனர். இப்பகுதி மக்களும், மாணவ செல்வங்களும், பல முறை ஊராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் கூறியும் இது வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத நிலையில் அச்சத்துடன் கோயம்பள்ளி பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதே போல் கரூரை அடுத்த பாலம்மாள் புரத்திலும் இதே போன்ற பன்றிகளை பட்டியில் அடைக்காமல் வளர்த்து வருவதால் ஒருவிதமான நோய்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.. ஆதலால் மாவட்ட நிர்வாகம் உடனே தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பகுதி பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதுகாப்பாக வாழ முடியும் என்பது சமூக நல ஆர்வலர்களின் கருத்தாகும்

English summary
People in Karur have urged the district administration to control the Pigs menace in the district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X