10 ரூபாய் காசு செல்லுமா? செல்லாதா? நெல்லையில் திண்டாடும் பொது மக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: 10 காசு செல்லாது என கூறி வணிக நிறுவனங்கள் வாங்க மறுப்பதால் நெல்லையில் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்தார். இதனால் புதிய 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளது.

Problem raised over 10 rupees coin validation

மேலும் புதிய 500, 200 நோட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளது. ஆனால் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் தற்போது 10 ரூபாய் நாணயங்கள் மதிப்பை இழந்து வருகிறது.

10 ரூபாய் நாணயங்களை 3க்கு மேல் கொடுத்தால் பெரும்பாலான கடைகளில் வாங்க மறுக்கின்றனர். நெல்லையில் உள்ள பல சில்லரை கடைகளில் கூட பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கி எச்சரித்து விளக்கம் அளித்த போதிலும் பத்து ரூபாய் நோட்டை வாங்க மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து நெல்லையை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், பத்து ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால் சில வங்கிகள் பத்து ரூபாய் நாணயத்தை வங்கி லாக்கரில் வைக்க இடமில்லை, நோட்டுகளாக கொண்டு வாருங்கள் என்று கூறுகின்றனர்.

சில வங்கிகள் பத்து, இருபது, ஐம்பது ரூபாய் நோட்டு கட்டுகளை கொண்டு சென்றால் கூட அதை வாங்க மறுக்கின்றன. 100க்கு குறையாது ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்றால் மட்டுமே பெறுகின்றனர் என குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாகவே நாங்கள் 10 ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை என்று கூறியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Huge problem raised over 10 rupees coin validation in Thirunelveli. People confusing over whether the 10 rupees coin is valid or not.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற