தலை விரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு... நெல்லை அருகே பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை:நெல்லை அருகே ராஜிவ் நகரில் குடிநீர் சீராக வழங்கப்படாததால் பொது மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சில மணிநேரங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை அருகேயுள்ள புதுக்கோட்டையில் ராஜிவ் நகர், ஐயப்பன் நகர் உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்கள் உள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை அரசு மேல்நிலை நீர்தேக்க தொட்டி தான் பூர்த்தி செய்து வருகிறது.

Protest took place in Tirunelveli to get proper drinking water!

ஆனால் கடந்த சில மாதங்களாக அங்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் பொது மக்கள் கோபத்தில் இருந்தனர்.

இந்நிலையில் மாலை திடீரென அவர்கள் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையி்ட்டனர். அங்கு அலுவலகம் முன்பு அமர்ந்து சீரான குடிநீர் வழங்க கோரி கோஷம் எழுப்பினர். போராட்டம் பற்றி அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன் அங்கு வந்தார்.

சிவராஜன் மற்றும் போலீசார் ஆகியோர் இணைந்து அங்கு போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு நாளுக்குள் குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Protest took place in Tirunelveli to get proper drinking water. People have protested to get proper supply of drinking water , they have gathered opposite to the municipal office.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற