கூகுளில் பக்கோடாவை ட்ரெண்டாக்கியதில் புதுச்சேரி, தமிழகம் தூள் கிளப்பிடுச்சு... என்னா சூடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பக்கோடா விற்பதும் வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதால் நாடு முழுவதும் இளைஞர்கள் பக்கோடா கடை நடத்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பக்கோடா கடை போட்டு பாஜகவை தெறிக்க விடும் இளைஞர்கள் கூகுள் தேடல் களஞ்சியத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கூகுளில் பக்கோடா என்ற வார்த்தையை அதிகம் தேடியவர்களில் புதுச்சேரி முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி வேலைவாய்ப்பில்லை என்று சொல்வது தவறு, பக்கோடா விற்பது கூட வேலை தான். பக்கோடா விற்று ஒரு நாளைக்கு ரூ. 200 சம்பாதிப்பதும் வேலைவாய்ப்பு தான் என்று கூறி இருந்தார். 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் பக்கோடா விற்பதும் வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் கூறியது கடும் விமர்சனங்களை உருவாக்கியது.

பிரதமரின் கருத்தை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரு, புதுச்சேரி என்று காங்கிரஸ் மாணவர் பிரிவினர் சார்பில் கல்வி நிலையங்களுக்கு வெளியே பக்கோடா கடை போட்டு வியாபாரம் செய்யும் நூதன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பக்கோடா என்ற வார்த்தை ட்ரெண்ட்

பக்கோடா என்ற வார்த்தை ட்ரெண்ட்

நாடு முழுவதும் பக்கோடா விவகாரம் மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ள நிலையில் பக்கோடாவை வைத்து பாஜகவை தெறிக்க விட்டு வருகின்றனர் இளைஞர்கள். இதே போன்று தேடல் களஞ்சியமான கூகுளிலும் பக்கோடாவை அதிக அளவில் தேடியுள்ளனர்.

புதுச்சேரி 1, தமிழ்நாடு 2

புதுச்சேரி 1, தமிழ்நாடு 2

கடந்த 12 மாதங்களில் பக்கோடாவை கூகுளில் தேடியவர்களை விட ஒரு வாரத்தில் தேடியவர்களில் தென்இந்தியாவில் புதுச்சேரி முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. கூகுள் ட்ரெண்ட் மேப்பில் பக்கோடா என்ற வார்த்தையை தேடியவர்கள் பற்றிய விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் தேடலில் பக்கோடா டாப்

கூகுள் தேடலில் பக்கோடா டாப்

அதில் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்தோர் அதிக அளவில் கடந்த ஒரு வாரத்தில் பக்கோடா என்ற வார்த்தையை தேடியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 85 சதவீதம் பேரும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 70 சதவீதம் பேரும் தேடியுள்ளதாக கூகுள் ட்ரெண்ட் மேப் கூறுகிறது.

பிரதமரின் பேச்சால்

பிரதமரின் பேச்சால்

தீபாவளி சமயத்தில் தான் இதற்கு முன்னர் கூகுளில் பக்கோடா என்ற வார்த்தையை தென் இந்தியர்கள் அதிக அளவில் தேடியுள்ளனர். ஆனால் ஒரு வார தேடலுக்கான ரகசியம் பக்கோடா விற்பதும் வேலைவாய்ப்பு தான் என்று பிரதமர் சொன்னதே காரணம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The word Pakoda trends in google searcch engine by Tamilnadu and Pondicherry people beccause of PM Modi's version that selling Pakoda is also an employment.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற