For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் பயணத்தில் இனி இந்த ஆவணங்கள் தேவை- ரயில்வே ஆணையம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: பயணிகளுக்கு ரயில்வே ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் பற்றிய விவரங்களை ஆணையம் வெளியிட்டுள்ளது.

ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள், இணையதளம் மற்றும் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் இரண்டாம் வகுப்பு, குளிர்சாதன வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளிலும் பயணம் செய்ய ஆவணங்கள் அவசியம்.

மேலும், ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை தங்களுடைய பயணத்தின்போது எடுத்து செல்லவேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.

அடையாள அட்டைகள்:

அடையாள அட்டைகள்:

பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், மத்திய அல்லது மாநில அரசு பிரத்தியேக எண்ணுடன் கொடுத்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, புகைப்படம் ஒட்டப்பட்டுள்ள கிரெடிட் கார்டு ஆகியவை அவசியம்.

வோட்டர் ஐடியும் ஓகே:

வோட்டர் ஐடியும் ஓகே:

மேலும், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் புகைப்படம் ஒட்டப்பட்ட புத்தகம், அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரியால் கொடுக்கப்பட்ட அடையாள அட்டையும் அவசியம்.

பயணத்தில் அவசியம்:

பயணத்தில் அவசியம்:

ஆதார் கார்டு, மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் செயல்படும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்துறை சார்பில் வழங்கப்பட்ட பிரத்தியேக எண் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பயணத்தின்போது காண்பிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடைமுறை:

பாதுகாப்பு நடைமுறை:

இந்த அடையாள அட்டைகள் இல்லாவிட்டால், பயணிகள் இனி பயணம் செய்ய இயலாது.தீவிரவாத செயல்களைத்தடுக்கவும், இனிமேல் சென்ட்ரல் குண்டுவெடிப்பு போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவும் இந்த நடைமுறை வலுப்படுத்தப்படுவதாக ரயில்வே ஆணையம் அறிவித்துள்ளது.

English summary
Railway department announced new documents for travel in trains. Passengers must have any one of this documents when the time of travelling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X