செப். 1 முதல் புதிய கால அட்டவணையின்படி ரயில்கள் ஓடும்
சென்னை: சென்னையில் தெற்கு ரயில்வேயின் புதிய ரயில் கால அட்டவணை செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அன்று முதல் புதிய நேரத்தில் ரயில்கள் இயக்கப்படும். மேலும், 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள், அதிவேக சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றம் செய்யப்படவும் உள்ளன.
அதேசமயம், ஆகஸ்டு மாதம் முடிய பழைய கால அட்டவணையே பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

செப்டம்பரில் அறிமுகம்:
இதுபற்றிய தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பானது, "இந்த ஆண்டிற்கான ரயில்கள் கால அட்டவணை செப்டம்பர் 1 அன்று வெளியிடப்பட உள்ளது. மேலும், இதன்மூலம் 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிவேக எக்ஸ்பிரஸ்களாக மாற்றமடைய உள்ளன. இது ஜூலை முதலே நடைமுறைக்கு வர உள்ளது.

மங்களூர் விரைவு ரயில்:
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூர் நோக்கி புறப்படும் சென்னை சென்ட்ரல் - மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 13 ஆம் தேதி முதல் அதிவேக ரயிலாக இயக்கப்படுகிறது.

மாற்றப்படும் மற்ற ரயில்கள்:
அதேபோல மறுமார்க்கமாக வரும் மங்களூர்-சென்னை சென்ட்ரல் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ஜூலை 13 ஆம் தேதி முதல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படுகின்றன.

ஷாலிமார், எர்ணாகுளம் ரயிகள்:
சென்னை சென்ட்ரல் வழியாக செல்லும் திருவனந்தபுரம்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ஜூலை 12 ஆம் தேதியிலும், கோவை வழியாக செல்லும் எர்ணாகுளம்-பாட்னா வாரம் இருமுறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னை வழியாக செல்லும் திருவனந்தபுரம்-இன்டோர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை ஜூலை 14 ஆம் தேதியிலும் அதிவேக ரயில்களாக இயக்கப்பட உள்ளன.

ரயில்களின் நேரங்கள் மாற்றம்:
ஜூலை 1 ஆம் தேதி முதல் கோவை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் மெயில் அதிகாலை 2.45 மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.

யஷ்வந்த் பூர் – கன்னூர் ரயில்:
மறுமார்க்கமாக வரும் திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் மெயில் இரவு 11.45 மணிக்கு கோவையை சென்றடையும். யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும் யஷ்வந்த்பூர்-கன்னூர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 3.20 மணிக்கும், மறுமார்க்கமாக வரும் கன்னூர்-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 11.35 மணிக்கும் கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

மும்பை – சிஎஸ்டி ரயில்:
இதேபோல சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றபட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் மும்பையில் இருந்து தினந்தோறும் 11.45 மணிக்கு புறப்படும் மும்பை சி.எஸ்.டி.-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் , சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு காலை 4.25 மணிக்கு வந்தடையும்.

வாராந்திர ரயிகளின் நேர மாற்றம்:
ஜூலை 3 ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் மட்டும் கோவையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில், சனிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ராஜ்கோட் சென்றடையும்.

கோவை – சென்னை ரயில்:
ஜூலை 4 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகள் தோறும் கோவையில் இருந்து புறப்படும் கோவை-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை காலை 7.15 மணிக்கு வந்தடையும்.

தினசரி ரயிலாக மாற்றம்:
ஜூலை 13 ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல்-மைசூர் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில், மைசூர் ரயில் நிலையத்துக்கு காலை 6.45 மணிக்கு சென்றடையும். ஜூலை 14 ஆம் தேதி முதல் கோவையில் இருந்து தினந்தோறும் புறப்படும்

செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம்:
கோவை-மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில், மன்னார்குடி ரயில் நிலையத்தை காலை 7.55 மணிக்கு சென்றடையும். ஜூலை 14 ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல்-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் , காலை 7.10 மணிக்கு மதுரையைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications