நாடா புயல் எச்சரிக்கை.. கடலூரில் மீட்பு குழுக்கள் தயார் - ஆட்சியர் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடலூர்: புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கடலூரில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 80 பேர் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, புயலாக வலுப்பெற்று உள்ளது. இதற்கு நாடா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் கடலூர் அருகே கரையைக்கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடா புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர பகுதிகளில் குறிப்பாக கடலூர், சிதம்பரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Rain Forecast Advisory Meeting at Cuddalore

புயல் எச்சரிக்கையை அடுத்து கடலூரில் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் ராஜேஷ், கடலூரில் நாளை மறுநாள் பொதுமக்கள் பயணத்தை தவிர்க்கவேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப கூடாது.தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 80 வீரர்களும், மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 40 வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

Rain Forecast Advisory Meeting at Cuddalore

புயல் பாதுகாப்பிற்க்காக மாவட்டத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ன. 29 புயல் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தபட்டள்ளன, 49 கடலோர கிராமங்களில் 30 கண்கானிப்பு குழுக்களும், 50 படகுகளும் தயார் நிலையில் உள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். தங்களின் உடமைகள் மற்றும் படகுகளை பாதுகாப்புடன் வைத்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலமும் மீன்வளத் துறையின் மூலமும் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

மேலும் 3000 மின் கம்பங்கள் தயர் நிலையில் உள்ளது. அவசர உதவிக்கு 1077 , 220 700 , 231666, என்ற எண்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளி செல்ல வேண்டாம். கூறை வீட்டில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்க்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain Forecast Advisory Meeting at Cuddalore Collector office on today,
Please Wait while comments are loading...