For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை... இன்றும் மழை பெய்யும்!

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்றிரவு 9 மணியளவில் திடீரென சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது.

இடி, மின்னலுடன் கிட்டதட்ட 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பெய்த இந்த மழையால் நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

முறிந்து விழுந்த மரங்கள்:

முறிந்து விழுந்த மரங்கள்:

காற்று பலமாக வீசியதால் சாந்தோம், அடையார், வடபழனி, எம்ஜிஆர் நகர், அம்பத்தூர் உள்பட நகரில் பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

விமானங்கள் தவிப்பு:

விமானங்கள் தவிப்பு:

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் 30 நிமிட நேரம் தரை இறங்கவும், புறப்பட்டு செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது.

காற்றும், மழையும்:

காற்றும், மழையும்:

ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர் நகரங்களில் இருந்து வந்த 3 விமானங்கள் தரை இறங்க முடியாமல் தவித்தன. சுமார் 30 நிமிட நேரம் விமானங்கள் வானில் வட்டமிட்டன. காற்றும், மழையும் குறைந்த பிறகுதான் தரை இறங்கியது.

பாதிக்கப்பட்ட போக்குவரத்து:

பாதிக்கப்பட்ட போக்குவரத்து:

பேருந்து நிலையத்திற்கு வந்து சென்ற பயணிகள் பலத்த மழையின் காரணமாக கடும் அவதிப்பட்டனர். பஸ் நிலையம் அருகே தண்ணீர் தேங்கி கிடந்ததால் பேருந்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மின்தடையால் அவதி:

மின்தடையால் அவதி:

இடி, மின்னலுடன் காற்று பலமாக வீசிக்கொண்டே இருந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் கொசுகடியில் மக்கள் தூக்கமின்றி தவித்தனர்.

மற்ற இடங்களிலும் மழை:

மற்ற இடங்களிலும் மழை:

சென்னையை போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை:

காற்றழுத்தத் தாழ்வு நிலை:

இந்த நிலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரவு நேரத்தில் மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு:

கனமழைக்கு வாய்ப்பு:

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது சிறு தூறல்களுடன் மழை பெய்யும். இரவில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
During Convection, Tamil Nadu and Chennai may expect rain today. Chennai metrological centre says that rain will fall today also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X