சென்னையில் சிக்கிய ஐஎஸ் ஆதரவாளர் ஹாரூண் சகோதரர்களுக்கும் போலீஸ் சம்மன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பிடிபட்ட ஐஎஸ் இயக்க ஆதரவாளர் ஹாரூண் சகோதரர்களும் விசாரணைக்கு ஆஜராக ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹாரூண், சென்னை மண்ணடியில் வசித்து வந்தார். சென்னை பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடையையும் அவர் நடத்தி வந்தார்.

Rajasthan police summons ISIS supporter's brothers

இவர் உலகின் மிக மோசமான பயங்கரவாத இயக்கமான ஐஎஸ் அமைப்புக்கு இந்தியாவில் நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக ராஜஸ்தான் பயங்கரவாத தடுப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்ற ஐஎஸ் இயக்க ஆதரவாளர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தைச் சேர்ந்த ஹாரூண் உட்பட சில இளைஞர்கள் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

தற்போது ஹாரூணை கைது செய்த ராஜஸ்தான் போலீசார் அவரது இரு சகோதரர்களும் விசாரணைக்கு வர உத்தரவிட்டு சம்மன் அனுப்பியுள்ளனர். ஹாரூணின் சகோதரர்களான ராஜா முகமது, சிக்கந்தர் இருவரும் விசாரணைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajasthan's Special Operation Guard police team summons to Chennai ISIS supporter's brothers.
Please Wait while comments are loading...