ரஜினியும், கமலும் ஓட்டுக்கு ரூ.1000 கொடுப்பாங்களா... ஸ்ரீபிரியாவை நோக்கி பாய்ந்த கேள்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்தால் இவர்களால் ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியுமா என்று ரசிகர்கள் கேள்விக்கு நடிகை ஸ்ரீபிரியா பதிலளித்துள்ளார்.

தற்போது தமிழக அரசியலில் மிகவும் எதிர்பார்ப்பாக இருப்பது முதலில் அரசியலுக்கு வருவது யார், ரஜினியா, கமலா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் லஞ்சம், ஊழலை எதிர்த்து குரல் கொடுத்தனர்.

இவர்களின் கருத்துகளை வைத்து அவ்வப்போது தொலைகாட்சி சேனல்களும் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றன. நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி அறிவிக்கக் கூடும் என்றும் நடிகர் ரஜினியோ அவரது பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி அறிவிப்பு

ரஜினி அறிவிப்பு

இதனிடையே ரஜினிகாந்த் இந்த அக்டோபர் மாதத்தில் ரசிகர்களை சந்திக்கக் கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. எனினும் அந்த சந்திப்பை கைவிட்டுவிட்டு வரும் ஜனவரியில் பெரிய அரசியல் மாநாட்டை நடத்தலாம் என ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விவாதப்பொருளான அரசியல் பிரவேசம்

விவாதப்பொருளான அரசியல் பிரவேசம்

கமலும், ரஜினியும் அரசியலுக்கு வருவது என்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. பெரும்பாலான டிவி நிகழ்ச்சிகளில் இது குறித்த விவாதமே பெரிதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

என்ன கூறுகிறார் ஸ்ரீபிரியா

கமல், ரஜினியின் நண்பராக அறியப்படுபவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தன் பதிவில், எல்லா டிவி சேனல்களும் ரஜினி-கமல் குறித்த அரசியல் பிரவேசத்தை பற்றி விவாதங்களை நடத்தி வருகின்றன. அவர்களால் ஏன் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர முடியாது. அவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீபிரியாவின் பதில்

ஸ்ரீபிரியாவின் கருத்துக்கு ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் போன தடவை ரூ.1000 கொடுத்தீங்க. இப்ப எவ்வளவு கொடுப்பீங்கனு வேட்பாளர்கள் கிட்ட மக்கள் ஓபனா கேட்குறாங்க. அவ்வளவு பணத்துக்கு கமலும், ரஜினியும் எங்கே போவாங்க என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நல்ல பதில்

இதற்கு ஸ்ரீபிரியாவோ, உங்கள் ஓட்டை ஒருமுறை விற்று வீட்டீர்களானால் அரசின் தரத்தை கேள்வி கேட்கும் அதிகாரத்தை இழந்து விடுவீர்கள். ஏனென்றால் அந்த பணமானது கணக்கில் வராதது என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Sripriya says that Rajini- Kamal can give positive change in TN. So they should come to politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற