ரஜினியின் முதல் "ஜெர்க்".. பாபா முத்திரையுடன் இருந்த தாமரைக்கு குட்பை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆன்மீகத்திற்கும் அரசியலிற்கும் வேறுபாடு தெரியாதவரா ரஜினிகாந்த் ?- வீடியோ

  சென்னை: தாமரையுடன் கூடிய பாபா முத்திரைக்கு ரஜினிகாந்த் குட்பை சொல்லிவிட்டார். ரஜினிகாந்தின் புதிய இணையதளத்தில் தாமரை நீக்கப்பட்ட பாபா முத்திரை மட்டும் இடம்பெற்றிருக்கிறது.

  சர்வதேச அரசியலில் ஒரு சொல்லாடல் உண்டு.. அமெரிக்காவின் மென்மை முகம் நார்வே; அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல். இதேபோல்தான் இந்திய அரசியலில் பாஜக காலூன்றுவதற்கு ஏகப்பட்ட முகங்களை களமிறக்கி முட்டி மோதுகிறது.

  கேரளாவில் ஈழவர் சமூகத்தின் வெள்ளாபள்ளி நடேசனை தனிக்கட்சி தொடங்க வைத்தும் மாதா அமிர்தானந்த மாயி சீடர்களை களமிறக்கியும் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது பாஜக. இதனால் அம்மாநில சட்டசபைக்குள் ஒரு எம்.எல்.ஏ.வுடன் பாஜக நுழைந்தது.

  காட்டு காட்டிய ஆர்கே நகர்

  காட்டு காட்டிய ஆர்கே நகர்

  தமிழகத்தில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை தம் வசப்படுத்திக் கொண்டது பாஜக. ஆனால் பாஜக மீதான தமிழகத்தின் கடும் அதிருப்தியும் அதிமுக மீதும் தமிழக அரசு மீதும் காட்டப்படுவதை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியது. பாஜகவை எதிர்க்கக் கூடியவராக கருதப்படும் தினகரனுக்கு வெற்றியைத் தந்தது ஆர்.கே.நகர் தொகுதி.

  திராவிடத்துக்கு மாற்று

  திராவிடத்துக்கு மாற்று

  இதனால் தமிழகத்தில் காலூன்ற, எதையாவது தின்று பித்தத்தை தெளியவைக்கும் பாஜகவின் புதிய முயற்சியாகவே ரஜினிகாந்தியின் 'ஆன்மீக அரசியல்' பார்க்கப்படுகிறது. பாஜக மற்றும் அதன் அனுதாபிகளால் ரஜினிகாந்தால் மட்டுமே திராவிடத்துக்கு மாற்றான அரசியலை முன்வைக்க முடியும் என்கிற கருத்து பரப்பப்பட்டு வருகிறது.

  குறுக்குமுகம் ரஜினி

  குறுக்குமுகம் ரஜினி

  கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற கோஷத்தால் திரும்பிய திசையெங்கும் மரண அடி வாங்கும் பாஜகவுக்கு ரஜினிகாந்தின் 'ஆன்மீக அரசியல்' புத்துயிர் தரக்கூடியதாகத்தான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவின் அரசு முகமாக அதிமுகவும் குறுக்குவழி முகமாக ரஜினியின் ஆன்மீக அரசியலும் இருக்கிறது.

  மறைக்க முயற்சி

  மறைக்க முயற்சி

  இந்த அப்பட்டமான உண்மையை மறைக்க ரஜினிகாந்த் தரப்பு படுமும்முரமாக இருக்கிறது. இதன் முதல்கட்டமாகவே இதுவரை ரஜினிகாந்தின் "தாமரையில் பாபா முத்திரை" சின்னம் மாற்றப்பட்டுள்ளது. தாமரை என்றாலே தமிழக மக்கள் தடி கொண்டு அடிப்பார்கள் என்பதை புரிந்து கொண்டதாலோ என்னவோ தற்போது பாபா முத்திரையில் இருந்த தாமரையை தூக்கி கடாசியிருக்கிறார் ரஜினிகாந்த்.

  இன்னொரு முகம் இருக்கு

  இன்னொரு முகம் இருக்கு

  என்னதான் தாமரையை மறைத்தாலும் ரஜினி உச்சரித்துவிட்ட ஆன்மீக அரசியல் என்பது பாஜகவின் பூனைக்குட்டி வெளியே வந்தது வந்ததுதான் என்பதை காட்டிக் கொடுத்துவிட்டது தமிழக அரசியல் களத்தில். அடுத்ததாக அவர் அறிவிக்கப் போகும் கட்சியின் பெயரும் ஆன்மீகம் சார்ந்ததாகவே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை... எத்தனை முகத்தோடு பாஜக வந்தாலும் தமிழகம் 'இன்'னொரு முகத்தை காட்டிக் கொண்டுதான் இருக்கப் போகிறது!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth has removed the White Lotus image from his 'Baba Symbol' in http://www.rajinimandram.org website.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X