For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சபாஷ்.. பலே'.. எதிர்பார்த்தபடியே பேசியுள்ளார் ரஜினிகாந்த்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் நேற்று தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த்-வீடியோ

    சென்னை: எதிர்பார்த்தபடியே பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதன் மூலம் அவரது அரசியல் பாதை என்ன என்பது பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது.

    சென்னையில் நேற்று தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் இரு முக்கியமான விஷயங்களுக்கு தனது பதிலை தெரிவித்துள்ளார்.

    அதில் ஒன்று சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டம், மற்றொன்று, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பானது.

    மத்திய அரசு திட்டத்திற்கு ஆதரவு

    மத்திய அரசு திட்டத்திற்கு ஆதரவு

    இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கேள்விக்கு, அப்படித்தான் சட்டசபை மற்றும், லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது ஒரு நல்ல திட்டம் என்று மத்திய பாஜக அரசின் இந்த திட்டத்திற்கு ஆதரவை தெரிவித்தார் ரஜினிகாந்த். இதற்கு அவர் தெரிவிக்கும் காரணம், நேரமும், பணமும் மிச்சமாகும் என்பது. அரசியல்வாதிகளின் நேரம் தேர்தலுக்காக செலவிடப்படுவது சேமிக்கப்படும் என்றார் அவர்.

    சேலம் சாலை திட்டம்

    சேலம் சாலை திட்டம்

    மற்றொரு முக்கியமான விவகாரம், சேலம் 8 வழிச்சாலை பற்றியது. தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பிறகு அங்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், எதெற்கெடுத்தாலும் போராடினால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்று பிரஸ்மீட்டில் தெரிவித்திருந்தார். அதேபோன்ற பார்வைதான் சேலம் விவகாரத்திலும் ரஜினியிடம் இருந்தது. அதாவது ஆள்பவர்களின் பார்வை.

    நாட்டிற்கு தேவை

    நாட்டிற்கு தேவை

    சேலம் 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு தேவை என்று தெரிவித்தார், ரஜினிகாந்த். விவசாயிகளுக்கு அதிக நஷ்ட ஈடு தரலாம் என்றார். ஆனால் நஷ்ட ஈடு தந்தாலும் இடத்தைவிட்டுத்தர மாட்டோம் என்று கூறும் மக்களுக்கு ரஜினிகாந்த்தின் பதில் என்ன? வலுக்கட்டாயமாக பிடுங்குவதா? கூடுமானவரை விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சாலை அமைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறிய கருத்து, மக்களின் கோபத்தில் சிக்க கூடாது என்பதற்கான ஜால்ஜாப்பு வார்த்தைகள்தான். ஏனெனில், விவசாய நிலங்கள்தான் சாலை அமையும் இடத்தில் பெரும்பான்மையாக உள்ளது. போயஸ் கார்டன் பகுதியில் 8 வழிச்சாலை அமைக்கலாம், ஆனால் ரஜினிகாந்த்தின் வீடு பாதிப்படைய கூடாது என்று சொன்னால் எப்படி அது நகைப்புக்குரியதாக இருக்குமோ அப்படி உள்ளது, சேலம் நெடுஞ்சாலை பற்றிய ரஜினியின் கருத்தும்.

    English summary
    Actor Rajinikanth's press meet gives any speculation on one India one Election and Salem express way.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X