For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரறிவாளன் வாக்குமூலத்தை திருத்தினேன்: சிபிஐ முன்னாள் எஸ்.பி. ஒப்புதலால் பரபரப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Rajiv Gandhi assassination case: ‘Perarivalan's statement not recorded verbatim’
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யாமல் திருத்தம் செய்தேன் என்று சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜிவ் வழக்கில் சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் பேரறிவாளனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவர் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கி, சிவராசனிடம் கொடுத்தேன். அவற்றை வெடிகுண்டுகளில் சிவராசன் பயன்படுத்தினார் என்று பேரறிவாளன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தான் வாங்கிய பேட்டரி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியும் என்று பேரறிவாளன் கூறவே இல்லை.

அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது, நான் பேட்டரியை வாங்கி கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதை கேட்டார் என்று தெரியவில்லை என்றுதான் பேரறிவாளன் கூறினார்.

என்ன மாதிரியான திருத்தம்?

ஒரு விசாரணை அதிகாரி என்ற முறையில், பேரறிவாளனின் வாக்குமூலம் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது தகுதியான வாக்குமூலம் அல்ல. அதாவது அவரது ஒப்புதல் இல்லாமல் சதி திட்டம் அரங்கேறியதாகதான் இதில் அர்த்தம் கொள்ளப்படும்.

இதனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை சேர்த்து கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் அதை நிச்சயம் மாற்றி இருந்திருப்பேன்.

கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காலை 11.30 மணி அளவில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பேரறிவாளன் வாக்குமூலம் கொடுத்த பின்னர், எனக்கு 2 வாய்ப்புகள்தான் இருந்தன.

அவரது வாக்குமூலத்தை அப்படியே ஏற்பது அல்லது பிற ஆதாரங்கள் அடிப்படையில் என்னுடைய அனுமானத்தை அதில் பதிவு செய்வது. அதனால் வேறு வழியின்றி 2வது வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன்.

வேறு ஆதாரம் இல்லையே..

வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் பேரறிவாளன் வாக்குமூலம் தகுதியானதாக இல்லாவிட்டால் அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். 22 ஆண்டுகளுக்கு பின்னர் என் செயலுக்காக வருந்துவதற்கு காரணம், இப்போது இல்லாவிட்டால் எப்போதும் முடியாது என்பதால்தான்.

ராஜிவ் கொலை வழக்கு விசாரணை முடிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனிடம் நான் வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டேன். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

துரதிருஷ்டவசமாக ராஜிவ் கொலை வழக்கில் வெடிகுண்டு யாரால், எங்கு தயாரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை சிபிஐயால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு தியாகராஜன் கூறியுள்ளார்.

22 ஆண்டுகள் கழித்து சிபிஐ முன்னாள் எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்திருக்கும் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரறிவாளனை உடனே விடுதலை செய்து வாக்குமூலத்தை திருத்தம் செய்த தியாகராஜனை கைது செய்ய வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
A former CBI officer involved in the investigation in the Rajiv Gandhi assassination case has purportedly said he had not recorded verbatim the statement of A G Perarivalan, a death convict in the case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X