ஜன.22-ல் அயோத்திக்கு போகாமல் ’மோட்ச நகரம்’ காஞ்சிபுரம் வரும் நிர்மலா சீதாராமன்- இதுதான் காரணமாம்!
சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை காஞ்சிபுரத்தில் பொதுமக்களுடன் இணைந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தாம் காண இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதை முன்னிட்டு, ஜனவரி 22 அன்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்திற்கு வருகை தர உள்ளார்.

கருட புராணம், பிரம்மாண்ட புராணம்: அயோத்தியைப் போலவே காஞ்சிபுரமும் ஏழு 'மோட்ச நகரங்களில்’ ஒன்றாகக் கருதப்படுகிறது. காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் தசரத மன்னன் 'புத்திரகாமேஷ்டி யாகம்’ செய்வதை விளக்கும் சிற்பம் உள்ளது. காஞ்சிபுரத்திற்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு பிரம்மாண்ட புராணம் மற்றும் கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வுகள்: காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ராம கீர்த்தன பாராயணம், கலைமாமணி திரு நாகை முகுந்தன் அவர்களின் கம்ப ராமாயண உபந்யாசம், பத்ம பூஷண் திருமதி. சுதா ரகுநாதன் மற்றும் குழுவினரின் 'பஞ்சரத்ன கீர்த்தனைகள், பல்வேறு புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். தியாகராஜர், சதாசிவ பிரம்மேந்திரர், அருணாச்சல கவி, பத்ராசல ராமதாஸர், அன்னமாச்சார்யா, புரந்தர தாசர் உள்ளிட்ட வாக்கேயக்காரர்களின் கீர்த்தனைகளும், சிலப்பதிகாரக் காப்பியம் குறித்த நிகழ்வும் நடைபெறுகின்றன.
காஞ்சிபுரத்தில் இருந்து.. : இதைத்தொடர்ந்து, அயோத்தியாவில் பிரதமர் மோடி, கலந்து கொள்ளும் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் இணைந்து காணொலிக் காட்சி மூலம் காண உள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எஸ்எம்ஜி சூர்யா மஹால் அருகே அமைந்துள்ள ராஜாராம் கார்டனில் காலை 8.00 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வுகளில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கலாம். காஞ்சிபுரம் மகாநகர் ஆன்மீக பேரவை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஏரி காத்த ராமர் கோவில் தூய்மை பணி: முன்னதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனவரி 21 அன்று, மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமர் கோவிலில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்பின்னர், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உபநிஷத பிரம்மேந்திர மடத்துக்குச் செல்கிறார். தொடர்ந்து ஸ்ரீ வரதராஜ சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்கிறார். இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications