For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது சிபிஐ நீதிமன்றம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பிரபலமடைந்த ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1999 - 2000 ம் ஆண்டுகளில் பெட்ரோலில் கலப்படம் செய்து 'ராமர் பெட்ரோல்' என விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ததது. மேலும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

Ramar Pillai gets 3 years prison

இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று உத்தரவிட்டது.

முன்னதாக மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக தமிழகத்தில் ராமர் பிள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தியா முழுவதிலும் இச்செய்தி பெரும் விவாதத்தை கிளப்பியது. மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், தனது கண்டுபிடிப்பை எந்த அதிகாரிகள் முன்னிலையிலும் செய்து காட்டி நிரூபணம் செய்யத் தயார் என்று ராமர் பிள்ளை அறிவித்தார்.

அதன்படி செய்தும் காட்டினார். ஆனால், அதை விஞ்ஞானிகள் நம்ப மறுத்தனர். மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அறவே இல்லை என்றனர். அதன் பின்னர் ராமர் பிள்ளை தனது கண்டுபிடிப்பை "மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றி விற்பனையில் இறங்கினார்.

அதற்காக சென்னையில் 15 விற்பனை நிலையங்களை துவக்கினார். முன்பணம் பெற்றுக் கொண்டு விற்பனை ஏஜென்டுகளை நியமித்தார். ஆனால், அவர் விற்பனை செய்த எரிபொருளை பயன்படுத்திய வாகனங்கள் பழுதாகின. இந்த புகாரை அடுத்து சிபிஐ மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் தான் ராமர் பிள்ளை கைது செய்யப்பட்டார்.

English summary
Herbal fuel inventor Ramar Pillai gets 3 years prison
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X