நடிகர் சங்க டிரஸ்ட்டி பதவியில் இருந்து விலகிய எஸ்வி சேகர்... காரணம் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க டிரஸ்ட்டி பதவியில் இருந்து நடிகர் எஸ்வி சேகர் திடீரென விலகி இருக்கிறார். நடிகர் சங்கத்தில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக இவர் காரணம் தெரிவித்துள்ளார்.

பாஜக கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகர் எஸ்வி சேகர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் டிரஸ்டி பொறுப்பில் இருந்தார். நடிகர் சங்கத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் அனைவருடனும் இவர் நெருக்கமாக இருக்கிறார்.

Reason behind S.VE.SHEKHER's resignation from trusty post

இந்த நிலையில் திடீர் என்று எஸ்வி சேகர் தனது நடிகர் சங்க டிரஸ்டி பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கு சில முக்கிய காரணங்கள் தெரிவித்துள்ளார். ஏற்கனேவே அவர் மலேசியாவில் நடந்த நடிகர் சங்க விழா குறித்து டிவிட்டில் பேசி இருந்தார்.

அவர் தனது டிவிட்டில் ''வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரிசமாக மிக கவுரவமாக நடத்தி,நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது.'' என்று விஜயகாந்தை பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில் பதவி விலகல் குறித்து பேசிய அவர் ''நட்சத்திர கலைவிழாவில் அதிக அளவில் குளறுபடிகள் நடந்து இருக்கிறது. நடிகர் சங்கத்தில் நிறைய பிரச்சனை இருக்கிறது. வெறுமனே கையெழுத்து போடுவதற்காக என்னால் நடிகர் சங்க பொறுப்பில் வேலை பார்க்க முடியாது'' என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
S.VE.SHEKHER resigned from South India Actors association's trusty post. The reason behind his sudden resignation has came out. He says that South India Actors association does not work properly.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற