ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக புகார்... 25 தமிழர்கள் கைது - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூரில், செம்மரம் கடத்தியதாக 25 தமிழார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகிலுள்ள கதிரிநாயுடு வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற போலீசார் செம்மரம் வெட்டியதாக 25 தமிழர்களைக் கைது செய்தனர்.

Red sanders abduction ans Tamilians arrested in andhra

மேலும் அவர்களிடம் இருந்து 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல் செய்துள்ளனர். செம்மரம் கடத்தியதாக கைது செய்யபப்ட்ட தமிழர்கள்50 பேருக்கும் மேற்பட்டவர்கள் ஆந்திரா சிறைகளில் வாடி வருகின்றனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் மறுத்து வருகிறது.

செம்மரக் கடத்தலில் கூலித் தொழிலாளிகள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர். ஆனால் இதர்கு பின்னால் இயங்கி வரும் மாபியா கும்பலை போலீசார் இதுவரை கைது செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Andra pradesh Tamilians arrested for abducting red sanders.
Please Wait while comments are loading...