சர்வதேச அளவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர் சென்னையில் கைது.. ஆந்திர போலீஸ் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச அளவில் செம்மர கடத்தலில் ஈடுபட்டு வந்த சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை ஆந்திர போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காவல் நிலைய போலீசார் நேற்று சர்வதேச அளவில் செம்மரங்களை வெட்டி கடத்தி வந்த சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை கைது செய்தனர்.

 Red Sanders Smugglers arrested

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த கண்ணன் மீன்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்தார். இதனிடையே கடந்த 2011 ம் ஆண்டு முதல் சித்தூர், நெல்லூர், கடப்பா மாவட்டத்தில் உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இவர் மீது கல்லூர், நிண்ரா, காணிப்பாக்கம், பாக்ராபேட்டை, ஐராலா, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கண்ணன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டாலும் அவர் மட்டும் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Red Sanders Smugglers arrested in chennai
Please Wait while comments are loading...