For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுசூதனன் ஓட்டுப் போட்டதை படம்பிடிக்க அனுமதி மறுப்பு - செய்தியாளர்கள் போராட்டம்

சென்னை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே. நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஓட்டுபோட்ட வாக்குச்சாவடியில் படம் பிடிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உள்ளே சென்ற செய்தியாளர்களை தடுத்து போலீஸ் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுசூதனன் ஓட்டுபோட்ட வாக்குச்சாவடியில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில், 1,10,903 ஆண் வாக்காளர்கள், 1,17,232 பெண் வாக்காளர்கள், 99 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,28,234 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 258 வாக்குச்சாவடி மையங்களில் 1,178 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 295 கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

Reporters stage protest in RK Nagar

ஆர்.கே.நகர் தொகுதியில் 258 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்தும் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் சென்னை காவல்துறை ஆணையர் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மதுசூதனன் தனது வாக்கை பதிவு செய்தார். மதுசூதனன் வாக்களிப்பதை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறையினர்,துணை ராணுவத்தினர் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

படம் பிடிக்க உள்ளே சென்ற செய்தியாளர்களை தடுத்து போலீஸ் தாக்கியதாக செய்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுசூதனன் ஓட்டுபோட்டு விட்டு வந்து செய்தியாளர்களிடம் பேசினார். மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று மதுசூதனன் கூறினார்.

English summary
News reporters staged a protest in a polling booth in RK nagar against the Police. They were stalled by the police inside the booth, so the mediapersons indulged in protest.Voters queue up outside polling stations in RK Nagar constituency for the bypoll that will have heavy bearings on the politics of Tamil Nadu. We will ensure free and fair elections, today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X