திருவண்ணாமலை அருகே ரூ. 94 லட்சம் பறிமுதல்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட 94 லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக இரவு நேரத்தில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று அதிகாலை முறையாறு பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாகனத்தை, துணை வட்டாட்சியர் ரமேஷ் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
அதில், 7 அட்டை பெட்டிகளில் 94 லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாய் பணம், மூன்று பட்டாசு பெட்டிகள் மற்றும் அதிமுக பிரசார நோட்டீசுகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த பணம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரிலிருந்த ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர், வாகனத்தோடு தப்பியோடிய உதய சங்கர் என்பவரை தேடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications