வச்சு செய்வார் புரோஹித்.. அடேங்கப்பா.. எஸ்வி.சேகர் கிளப்பும் பீதியைப் பாருங்க மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஆய்வு மூலம் தமிழக அரசு இனி இயங்க வாய்ப்பு இருப்பதாக பாஜகவின் எஸ்.வி.சேகர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகத்தினருடன் அதிரடியாக திடீரென ஆலோசனை நடத்தியவர், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டப் பணியையும் தொடங்கி வைத்துள்ளார்.

S.VE.Shekher support over governor Purohith review meet

இது மாநில உரிமைகளுக்கு எதிரானது, இல்லாத அதிகாரத்தை ஆளுநர் கையில் எடுக்கிறார் என்று அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன. ஆனால் அரசின் செயல்பாடுகளை கேட்டறிந்தால் தான் மாநில வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும் என்பது பாஜகவின் வாதம். இந்நிலையில் ஆளுநரின் ஆய்வு குறித்து பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், வழக்கமாக தமிழக அரசு செய்து கொடுக்கும் சவுகரியங்களுக்காக இயங்கிய ஆளுனர்களைப்பார்த்தவர்களுக்கு ,நேர்மையான ஆளுனரைப்பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஸ்தம்பித்துப்போயுள்ள தமிழ அரசு இனி இயங்க ஒரு வாய்ப்பு. புரோஹித் வைச்சு (இயங்க) செய்வார் என்று டுவீட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Actor and BJP member S.Ve.shekher tweeted supportedly for Governor visit and adds hereafter tamilnadu government will function fullfledgely.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X