உலக வரலாற்றிலேயே முதல் முறையாக.. அதிமுக இணைப்பு தொடர்பாக போர்க் கப்பலில் ஆலோசனை!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் சென்னை துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் போர்க்கப்பல் புறப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அலுவலகத்திலிருந்து அனைத்து எம்எல்ஏக்களும் இன்று சென்னை வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை அருகே வங்கக் கடலில் நங்கூரமிட்டுள்ள ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பலை பார்ப்பதற்காக என்று கூறப்பட்டிருந்தாலும், முக்கிய ஆலோசனை நடத்தவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று சென்னையில் ஆஜரான எம்எல்ஏக்கள் அனைவரும் ஐஎன்எஸ் போர்க்கப்பல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு போர்க்கப்பல் புறப்பட்டது.

யார் யார்?

யார் யார்?

முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ள இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், போக்குவரத்து துறை விஜயபாஸ்கர், ஓ. எஸ் மணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மற்றும் அனைத்து எம்எல்ஏக்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஓபிஎஸ் அணியுடன்…

ஓபிஎஸ் அணியுடன்…

இந்தப் போர்க்கப்பல் ஆலோசனையில் ஓபிஎஸ் அணியுடன் இணைவது குறித்துத்தான் விவாதிக்கப்படுகிறது கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், அதிமுக அம்மா அணி ஓபிஎஸ் அணியுடன் இணைய குழு அமைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆலோசனை நடத்தப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது,

கூவத்தூர்

கூவத்தூர்

சசிகலா தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய போது கூவத்தூரில் 122 எம்எல்ஏக்கள் சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதே போன்று தற்போது மீண்டும் சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் போர்க்கப்பலில் பயணம் செய்து இணைப்பு குறித்து பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக...

முதல்முறையாக...

பிளவு பட்ட அதிமுக மீண்டும் இணைவது குறித்து ஓரு கப்பலில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். ஐஎன்எஸ் போர்க்கப்பலில் நடைபெறும் ரகசிய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துவிட்டால் இரட்டை இலை சின்னம் மீண்டும் மீட்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ministers and MLAs of Sasikala team meet in INS ship today to discuss to join OPS team.
Please Wait while comments are loading...