For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. மறைந்த 30 நாட்கள் கூட ஆகாமல் 'உரை' தயாரிப்பில் பிசியான சசிகலா!

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா கடந்த 31ஆம் தேதி முதல் முறையாக உரையாற்றினார். மிகவும் உருக்கமாக இருந்த அந்த உரையை அவரது கணவர் நடராஜன், கவிஞர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு தயாரித்ததாக தகவல

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலா கடந்த 31ஆம் தேதி முதல் முறையாக உரையாற்றினார். மிகவும் உருக்கமாக இருந்த அந்த உரையை அவரது கணவர் நடராஜன், கவிஞர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு தயாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவர் கட்சியில் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை யார் ஏற்பது என்ற குழப்பம் எழுந்தது.

இதையடுத்து ஜெயலலிதாவின் தோழி சசிகலாதான் அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டும் என்றும் அவர்தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்றும் அதிமுக நிர்வாகிகளால் கூறப்பட்டது. பொதுச் செயலாளராக அவரை நியமிக்க அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பும் வலுத்தது.

இருப்பினும் கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 31ஆம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்ட சசிகலா அதிமுக நிர்வாகிகளிடையே முதல் முறையாக உரையாற்றினார்.

நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட உரை

நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட உரை

அந்த உரை கட்சி மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்தது. எம்ஜிஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படி காப்பாற்றினார்? ஜெயலலிதாவின் மரணத்துக்கான விளக்கம், தனக்கும் ஜெயலலிதாவுக்குமான நட்பு, ஜெயலலிதாவுக்காக செய்த தியாகங்கள் என மிக உருக்கமாகவும் தெளிவாகவும் அந்த உரை தயாரிக்கப்பட்டிருந்தது.

சென்டிமென்ட் டயலாக்குகளுடன் உரை

சென்டிமென்ட் டயலாக்குகளுடன் உரை

எம்ஜிஆரின் பாடல் வரிகள், எடுத்துக்காட்டுகள் என கைதேர்ந்த அரசியல்வாதியின் உரையை போல் இருந்தது சசிகலா பார்த்து படித்த அந்த அறிக்கை. சசிகலாவை எதிர்ப்பவர்கள் கூட அந்த உரையை கேட்டால் அவர் பக்கம் திரும்ப வேண்டும் என்பது போல் பல சென்டிமென்ட் டயலாக்குகளுடன் அந்த உரை தயாரிக்கப்பட்டிருந்தது.

விமர்சகர்கள் ஒப்புக்கொண்ட உரை

விமர்சகர்கள் ஒப்புக்கொண்ட உரை

மக்களின் பல்ஸை தெளிவாக தெரிந்த, அரசியல் ஆட்டத்தை அறிந்தவர்களால் மட்டுமே அப்படியொரு உரையை தயாரிக்க முடியும். இதனை அரசியல் விமர்சகர்களும் மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலரும் ஒப்புக்கொண்டனர்.

நடராஜன் உட்பட 3 பேர் குழு

நடராஜன் உட்பட 3 பேர் குழு

இந்நிலையில் சசிகலாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது கணவர் நடராஜன் தனது தலைமையில் கவிஞர் ஒருவர் உட்பட 3பேர் குழுவாக அந்த அறிக்கையை தயாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தவிர்க்கப்பட்ட குட்டிக்கதை

தவிர்க்கப்பட்ட குட்டிக்கதை

ஜெயலலிதாவைப் போல் உரையின் இறுதியில் கூற குட்டிக் கதை ஒன்றை தயாரித்து வைத்திருந்ததாகவும் ஆனால் கடைசியில் அதை கூறாமல் தவிர்த்து விட்டதாகவும் பேசப்படுகிறது. இனி வரும் கூட்டங்களில் பங்கேற்கும் போது அந்த பாணியை கடைபிடித்துக் கொள்ளலாம் என்றும் ஒரே அடியாக பின்பற்றினால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டதால் 'குட்டிக் கதை' கைவிடப்பட்டதாம்.

English summary
Sasikala sworn as the AIADMK general secretary on 31st in the party office. After that she addressed for the first time among people. The speech was made by sasikala's husband Natarajan and a poet, including the 3-member team sources says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X