கமல்ஹாசனை செயல் வரவேற்கத்தக்கது.. சீமான் பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்தது வரவேற்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரிலேயே அரசியல் மற்றும் மக்கள் பிரச்னைகள் தொடர்பாக கருத்து தெரிவித்து வந்த நிலையில் முதன்முறையாக சென்னை எண்ணூர் கழிமுகப் பகுதியை நேரில் பார்வையிட்டார். அனல்மின்நிலைய கழிவு மற்றும் ஆக்கிரமிப்புகளால் இந்தப் பகுதியில் வடகிழக்குப் பருவமழையின் போது ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டுவிட்டரில் கருத்து தெரிவித்த கையோடு அதிகாலையில் நேரில் சென்று பிரச்னை என்ன என்பதை பார்த்து வந்தார்.

Seeman welcomes Kamalhaasan's visit at Ennore

கமல்ஹாசனின் இந்த களப்பணிக்கு திருமாவளவன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் கமல் கள ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எண்ணூர் துறைமுக கழிமுக பகுதியை கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்தது வரவேற்கத்தக்கது என்றார்.

ரேஷன் கடைகளில் சர்க்கரை விலைஉயர்வு பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெறவே வழிவகுக்கும் என்றும் இதேநிலை நீடித்தால் வருங்காலத்தில் ரேஷன் கடையே இல்லாத நிலை உருவாகும் என்று குற்றம்சாட்டினார். பணமதிப்பிழப்பை முதலில் வரவேற்ற ஸ்டாலின் தற்போது அதை எதிர்ப்பது ஏன்? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam thamizhar party organiser Seeman welcomed the visit of Actor Kamalhaasn at Ennore area, where lot of environmental issues and affecting the livelihood of fishermen community.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற