உடல்நலக்குறைவு.. பிக்பாசில் இருந்து வெளியேறினார் நடிகர் ஸ்ரீ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் ஸ்ரீ வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோவில் நமீதா, ஓவியா, அனுயா, குண்டு ஆர்த்தி, சினேகன், கஞ்சா கருப்பு, வையாபுரி,ஸ்ரீ உள்பட 15 பேர் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.

shree quit from bigg boss house

பிக் பாஸ் 4வது எபிசோட் காட்சிகள் நேற்று இரவு காட்டப்பட்டன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிகள் எரிச்சல் அடைய செய்வதாக நடிகை ஓவியா கூறியுள்ளார். ஆனால் விதிகளுக்கு உட்பட்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம் என்று டீம் தலைவர் சினேகன் கூறினார். ஆனால் சினேகன் பேசுவதை துளியும் மதிக்காத நடிகை ஓவியா அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். அனுமதி இல்லாமல் எழுந்து போவது மரியாதையா? என கோபமாக கேட்கிறார் சினேகன்.

அதன்பின்னர் அங்கு வந்த ஓவியாவிற்கும் சினேகன் மற்றும் கஞ்சா கருப்பிற்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தலைவருக்கு மரியாதை கொடுக்கனும் என கடுமையாக பேசுகிறார் கஞ்சா கருப்பு. அப்போது ஓவியா விதிகளையும், குழு தலைவரையும் மதிக்கவில்லை என்று அனைவரும் குற்றம் சாட்டினர். அங்கிருந்து புறப்பட்டு சென்ற ஓவியாவை, ஆரவ் சமாதானப்படுத்தினார். அவரை தொடர்ந்து கஞ்சா கருப்புவும் சமாதானப்படுத்தினார். ஆனால் ஓவியா தன்னால் எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நடக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.

ஆனால் சிறிது நேரத்திற்கு சமாதானம் அடைந்த ஓவியா பின்னர் தலைவர் சினேகனை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டார். இதனிடையே நடிகர் ஸ்ரீ-க்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பிக் பாஸ் அவரை மருத்துவ ஆலோசனை பெற வைத்தார். மருத்துவர், ஸ்ரீ உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பரிந்துரைத்ததின் பேரில் ஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறினார். அனைவரும் ஸ்ரீ-க்கு கைகொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாகவே இருந்தார் ஸ்ரீ. உண்மையிலேயே உடல்நிலை காரணமாகத்தான் ஸ்ரீ வெளியேறியுள்ளாரா அல்லது வேறு எதாவது காரணமா என்பது குறித்து தெளிவான விளக்கம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எது எப்படியோ ஆனால் தமிழ் ரசிகர்களோ பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor shree quit from bigg boss house
Please Wait while comments are loading...