For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னா தில்லாலங்கடியாக கருப்புப் பணத்தை மாற்றியிருக்கிறார்கள்.. கொடநாடு பரபரப்பு!

கொடநாடு கிரீன் டீ எஸ்டேட்டில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கியது வருமான வரி சோதனையில் அம்பலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

நீலகிரி: சசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய ரெய்டில் ரூ.16 கோடி மதிப்புள்ள கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனையை தொடங்கினர். பெரும்பாலான இடஙகளில் விடிய விடிய சோதனை நடைபெற்று வருகிறது.

Some important documents seized in Kodanad Green tea Estate

இந்நிலையில் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட்டிலும், அங்குள்ள கிரீன் டீ எஸ்டேட்டில் அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள வங்கி கணக்கு குறித்து விவரங்களை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற பணமதிப்பிழப்பின்போது கருப்பு பணத்தை வெள்ளையாக்க டீ எஸ்டேட் நிறுவனத்தினர் புதிய வழியை கையாண்டது தெரியவந்துள்ளது.

அதாவது அங்கு பணியாற்றும் 800 தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.2 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ரூ.16 கோடி பணம் வெள்ளையாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

சசிகலாவின் கிரீன் டீ எஸ்டேட் நிறுவனம் தேயிலைத் தூளை ஏற்றுமதி செய்கிறது. அதன் பணபரிமாற்றம் கோத்தகிரியில் உள்ள ஒரு வங்கி நடைபெறுகிறது. தேயிலை தூள் ஏற்றுமதியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்து அதன் மேலாளர் நடராஜனின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
IT officials known that at the time of demonetisation Rs. 16 crores black money was converted in to accountable one by investing Rs. 2 lakhs on each staff.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X