For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம்: கருத்து கணிப்புக்கு தடை- யாத்ரி நிவாஸில் இருந்து அதிமுகவினர் வெளியே உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து கணிப்பு வெளியிட தேர்தல் அதிகாரி தடை விதித்துள்ளார். தேர்தல் முடிந்து 48 மணி நேரத்துக்கு கருத்து கணிப்புகள் வெளிடக் கூடாது என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

கோவிலுக்கு வரும் பயணிகளுக்காக கட்டப்பட்டிருந்த யாத்ரீநிவாஸில் அதிரடி சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு தங்கியிருக்கும் ஆளுங்கட்சியினரை வெளியேறவும் உத்தரவிட்டுள்ளனர்.

Srirangam by election: CEO bans opinion, exit polls till Feb 15

பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தொகுதி முழுவதும் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் தேர்தல் பிப்ரவரி 13ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றார். தேர்தல் முடிந்து 48 மணி நேரத்துக்கு கருத்து கணிப்புகள் வெளியிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

யாத்ரி நிவாஸில் சோதனை

இதனிடையே பக்தர்கள் தங்குவதற்கு உருவாக்கப்பட்ட ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அதிமுக நிர்வாகிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அங்கு தங்கியுள்ளவர்களை உடனே வெளியேற்றி 16ம் தேதி வரை யாத்ரி நிவாஸை பூட்டி சீல் வைக்க வேண்டும் என எதிர்கட்சியினர் அளித்த புகார் மனுவை அடுத்து அங்கு தேர்தல் அலுவலர் மனோகரன் சோதனை மேற்கொண்டார்.

வெளியேற மறுப்பு

அங்கு தங்கியிருந்த அதிமுகவினரை வெளியேற தேர்தல் அலுவலர் உத்தரவிட்டார். ஆனால் 11ஆம் தேதிவரை தங்குவதற்கு பணம் கட்டியிருப்பதாக கூறி அவர்கள் வெளியேற மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அதிமுகவினருக்கும் தேர்தல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தேர்தல் அலுவலகத்திற்கு சீல்

இதனிடையே ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கட்சிகளின் 6 தேர்தல் அலுவலகத்தையும் தேர்தல் அலுவலர் மனோகரன் சீல் வைத்துள்ளார்.

சின்னங்கள் அழிப்பு

மேலும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் வரையப்பட்ட சின்னங்கள் அளிக்கப்பட்டது. இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெறுவதால் 15 பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் அலுவலகர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

English summary
Chief Election officer Sandeep Saxena has banned dissemination and publication of exit polls or opinion polls and their results from feb 12 till 15 evening, the date of Srirangam by election polling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X