கமல்ஹாசனை மிரட்டுபவர்கள் எங்கள் மீது வழக்கு போடத் தயாரா? ஸ்டாலின் சவால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசனை மிரட்டுபவர்கள் எங்கள் மீது வழக்கு போட தயாரா? என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தானும் சட்டசபை உட்பட பல்வேறு இடங்களில் அதிமுகவின் ஊழல் குறித்து பேசியிருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதகா நடிகர் கமல்ஹாசன் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Stalin Says that Ministers threatening Kamalhassan

அன்று முதல் நடிகர் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் கட்டம் கட்டி விமர்சித்து வருகின்றனர். அமைச்சர்கள் நடிகர் கமல் குறித்து தரக்குறைவான வார்த்தைளாம் வசைப்பாடி வருகின்றனர்.

மேலும் தமிழக அரசு மீது அவதூறு பேசும் நடிகர் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் மிரட்டி வருகின்றனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஊழல் குறித்து பேசிய கமல்ஹாசன் மீது வழக்குப்போடப் போவதாக அமைச்சர்கள் மிரட்டுவதாக அவர் குற்றம்சாட்டினார். கமலை மிரட்டும் அமைச்சர்கள் தங்களின் மீது வழக்குப்போடத் தயாரா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசின் ஊழல் குறித்து தானும் சட்டசபை மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் பேசி வருவதாகவும் ஸ்டாலின் கூறினார். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் கருணாநிதி வாக்களிக்க மாட்டார் என்றும் ஸ்டாலின் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin Says that Ministers threatening Kamalhassan. He asked They will file complaint against me.
Please Wait while comments are loading...