மழை வெள்ளத்தை தெர்மாகோல் வைத்து செல்லூர் ராஜூ தடுப்பாரா? - ஸ்டாலின் கிண்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : மழை வெள்ளத்தை தெர்மாகோல் வைத்து செல்லூர் ராஜூ தடுப்பாரா என்று கேட்டு கிண்டலடித்துள்ளார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்.

தமிழகத்தில் குடிமரமாத்து பணிகள் நடைபெற்று இருந்தால் அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத்தயாரா என்றும் முதல்வருக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் ஸ்டாலின்.

தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் இன்று திருச்சியில் தி.மு.க சார்பில் நடைபெற்று வரும் ஏரி பராமரிப்பு பணிகளைப் பார்வையிட்டார்.

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ' இதுவரை மழைக்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

குடிமராமத்து பணி

குடிமராமத்து பணி

அமைச்சர்கள் அனைவரும் மக்களிடம் பொய் சொல்லி வருகிறார்கள். 400 கோடி ரூபாய்க்கு குடி மரமாத்துப் பணிகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அரசு. அப்படி பணிகள் நடைபெற்று இருந்தால் எங்கு, எப்போது நடைபெற்றது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட இந்த அரசு தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

குடிமராமத்து பணியில் ஊழல்

குடிமராமத்து பணியில் ஊழல்

மேலும், குட்காவைத் தொடர்ந்து இதிலும் ஊழல் நடந்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். மழை பெய்யும் சென்னையை விட்டுவிட்டு சேலத்தில் முதல்வர் ஆய்வுக்கூட்டம் நடத்துவது ஏன் என்றும் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

வெள்ளத்தை தடுப்பது எப்படி

வெள்ளத்தை தடுப்பது எப்படி

மழை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசு, திடீரென வெள்ளம் வந்தால் செல்லூர் ராஜூவை வைத்து தெர்மாகோல் கொண்டு வெள்ளைத்தை தடுக்கப்பார்க்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

நிதி வாங்கிய அரசு

நிதி வாங்கிய அரசு

ஓ.என்.ஜி.சி நிறுவனம் அடுத்தகட்ட வேலைகளை ஆரம்பித்து இருப்பதைக் குறித்த கேள்விகளுக்கு, அ.தி.மு.க அரசு அவர்களிடம் நிதி வாங்கி இருக்கிறது. அப்படி இருக்கும் போது இவர்கள் அதைத் தடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Stalin slams Tamilnadu Government for not taking precautionary monsoon safety measures and also asks white report on works done
Please Wait while comments are loading...