ஸ்டாலின் அதிமுக அரசை கலைக்க முயற்சி செய்கிறார்.. ஜெயக்குமார் பரபர குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டாலின் அதிமுக அரசை கலைக்க முயற்சி செய்வதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். ஸ்டாலின் எண்ணம் பகல் கனவாகவே முடியும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

எம்எல்ஏக்கள் பணம் வாங்கியது குறித்து எம்எல்ஏ சரவணன் பேசியதாக வெளியான வீடியோ பூதாகரமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக அரசை கலைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Stalin wants to dissolve the ADMK govt:Jayakumar

இந்நிலையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்டாலின் அதிமுக அரசை கலைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

ஸ்டாலின் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்று கூறிய அவர் சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றார். ஸ்டாலின் அதிமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். ஓபிஎஸ்க்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றும் ஜெயக்குமார் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Finance Minister Jayakumar says that, Stalin wants to dissolve the ADMK govt. His dream will not happen Jayakumar said.
Please Wait while comments are loading...