For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை மீனவர்கள் 14 பேர் விடுதலை: தமிழக அரசு உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 14பேரை தமிழக அரசு விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை மீனவர்கள் கடந்த மாதம் கன்னியாகுமாரி அருகே இந்திய கடல்பகுதியில் அத்தமீறி மீன் பிடித்தனர்.

இதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை மீனவர்கள் 14 பேரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்கள் சென்னை கொண்டுவரப்பட்டனர். கடந்த 18-ந் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து இலங்கை மீனவர்கள் 14 பேரும் புழல் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர். காலை 10.45 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வந்த அனைவரும் தனி வேன் மூலம் சென்னை எழும்பூர் புத்த மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இன்று மாலை 14 பேரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

ஏற்கனவே, சமீபத்தில் 11 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை 12 பேர் விடுதலை ஆனார்கள். இப்போது 14 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Following the government order, the Chief Judicial Magistrate (CJM) court here on Friday set free 14 fishermen, apprehended by the ICG for fishing in Indian waters off Kanyakumari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X