தமிழக முதல்வருடன் டிஜிபி, அமைச்சர்கள் அவசர ஆலோசனை.. முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்?
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக போலீஸ் செய்த வெறியாட்டத்தை அடுத்து, தற்போது தமிழக முதல்வர் பழனிசாமியுடன் காவல்துறை டிஜிபி, அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக போலீஸ் செய்த வெறியாட்டத்தை அடுத்து, தற்போது தமிழக முதல்வர் பழனிசாமியுடன் காவல்துறை டிஜிபி, அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்று பார்க்காமல் போலீஸ் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த மோசமான அரசு படுகொலை காரணமாக தமிழகமே கொதித்துப் போய் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தமிழக போலீஸ் செய்த வெறியாட்டத்தை அடுத்து, தற்போது தமிழக முதல்வர் பழனிசாமியுடன் காவல்துறை டிஜிபி, அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்த துப்பாக்கி சூடு குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க போராட்ட களமாக மாறியுள்ள நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications