For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலைப் பாடப் பிரிவுகளுக்கு திடீர் மவுசு.. சீட் கொடுக்க திணறும் கல்லூரிகள்!

கலைப் பாடப் பிரிவுகளுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு சீட் வழங்குவதில் கல்லூரிகள் திணறி வருகின்றன.

Google Oneindia Tamil News

நெல்லை: பொறியியலுக்கு மாற்றாக கலைப் பாடப் பிரிவுகளுக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளதால் மாணவிகள் குவிந்து வருகி்ன்றனர். இதனால் கலை கல்லூரிகள் திணறி வருகின்றன.

நெல்லை மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதில் நெல்லையில் உள்ள ராணி அண்ணா கல்லூரியில் இளங்கலையில் சுமார் 1252 இடம் மட்டுமே உள்ளது. இதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் களத்தில் இருப்பதால் கடும் போட்டி நிலவுகிறது.

Students are interesting to join in the Art courses

ராணி அண்ணா கல்லூரியில் கடந்த 12ம் தேதி முதல் மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. 22ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிக அளவில் மாணவிகள் வந்ததால் 25ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் பிஎஸ்சி, பிஏ உள்ளிட்ட மொத்தம் 14 பாட பிரிவுகள் உள்ளன. கூடுதலாக 7 பாடபிரிவுகள் தமிழிலும் உள்ளது.

இந்த பாடபிரிவுகளில் மொத்தம் 252 மாணவிகள் சேர்க்க வாய்ப்புண்டு. இவர்கள் இரண்டு பேட்ஜ்சாக பிரிக்கப்பட்டு காலை மற்றும் மதியம் என இரு வேளைகளில் பாடம் நடத்தப்படும். மாலை வரை இந்த கல்லூரியில் சேர 5111 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் ஒரு சீட்டுக்கு 5 பேர மோத வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கு மே 31ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

English summary
Students are interesting to join in the Arts courses. The colleges are getting stuck in giving seat to students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X