கறுப்புச் சட்டை போட்டா ரஜினி திராவிடரா.. சாமி கேள்வி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்த்துப் பேசி வருகிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி.

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் தொடக்கமாக, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை 5 நாட்களாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாக கருத்து சொல்லவில்லை என்றாலும் அவரின் அரசியல் பிரவேசம் பட்டவர்த்தனமாகவே தெரிகிறது.

தாக்கு

தாக்கு

இந்நிலையில், பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர் என்று தொடர்ந்து பேசி வருகிறார். ரஜினியிடம் ஒரு கருத்தும் கிடையாது என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் தோல்வியையே சந்திப்பார் என்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

கறுப்புச் சட்டை

கறுப்புச் சட்டை

அப்படி ஒரு தொலைக்காட்சியில் சு.சுவாமி பேசும் போது, ரஜினிகாந்த் இப்போது கறுப்பு சட்டை போட்டுக் கொண்டு அரசியல் பண்ண ஆரம்பித்துவிட்டார் என்று கூறினார். மேலும், பிராமணர்கள் வடநாட்டுக்காரர்கள் என்பது தமிழ்நாட்டு மக்களின் கொள்கை.

மராட்டியர்

மராட்டியர்

அப்படி இருக்கும் போது கர்நாடகத்தில் பிறந்த மாராட்டியரான ரஜினியை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று சு.சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினி தமிழன் இல்லாததால் அவரை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது சு.சுவாமியின் வாதம்.

திராவிடரா..

திராவிடரா..

அதே போல கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு மக்களை எதிர்க்கொள்வது திராவிட இயக்கத்தின் பண்பாடு. அதனை ரஜினி செய்வதால் மட்டும் அவர் திராவிடர் ஆகிவிடுவாரா என்றும், அவரை மக்கள்தான் ஏற்றுக் கொள்வார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP leader Subramanian Swamy has attacked Rajinikanth again in an interview today.
Please Wait while comments are loading...