மக்கள் தலையில் அடுத்த இடி.. வீட்டு உபயோக மானிய சிலிண்டரின் விலை ரூ. 2.07 உயர்வு...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 2.07 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 540.57 ஆக உயர்ந்துள்ளது.

மானியத்தில் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 2.07 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் ஒரு ஆண்டுக்கு 12 என்ற எண்ணிக்கையில் மானியத்துடன் வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

Subsidised LPG cooking gas cylinder price hiked

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலையை மாற்றி அமைக்கின்றன.அதன்படி இன்று 14.3 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தமிழகத்தில் ரூ.538.50ல் இருந்து ரூ.540. 57 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஓராண்டிற்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் வாங்குபவர்கள் சந்தை விலையிலேயே வாங்க முடியும். 12 சிலிண்டருக்கான மானியம் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The price of subsidised cooking LPG gas was hiked by about Rs 2.07 per cylinder.
Please Wait while comments are loading...