For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினிக்குப் பின்னால் "தாமரை".. ஏதாவது குறியீடா தலைவா??

தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் உள்ளது என்று வழக்கம் போல இந்த முறையும் சொல்லி அரசியல் பிரவேசம் குறித்து குழப்பமாகவே பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : பல ஆண்டுகளுக்கு பின்னர் ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று வழக்கமான குழப்பமான கருத்தையே தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கிறார் என்று தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மாவட்ட வாரியாக நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை முதலே கரூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்ட ரசிகர்கள் திருமண மண்டபத்தில் திரண்டனர். பார்கார்டுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே திருமண மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி தான் முடிவுகளை எடுப்பதில் குழப்பத்துடன் இருப்பதாக மீடியாக்கள் செய்தி வெளியிடுவதாகக் கூறினார்.

அரசியல் விபத்து

அரசியல் விபத்து

21 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாயத்தின் பேரில் ஒரு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், அது ஒரு அரசியல் விபத்து என்றாலும் ரசிகர்கள் அந்தக் கூட்டணிக்கு வெற்றியை தேடித் தந்ததாகவும் தெரிவித்தார். அரசியல் முதலைகள் இருக்கும் களம் இதில் காலை விட்டால் கடி வாங்குவேன் என்று தெரிந்தும் கால்விடுவேனா என்று தீனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக தெரிவித்தார்.

பணத்தாசை

பணத்தாசை

தனது ரசிகர்களை வைத்து அரசியல்வாதிகள் சிலர் லாபம் பார்த்ததாகவும், ரசிகர்கள் சிலரும் அரசியலில் பணத்தின் ரசியை பார்த்ததால் எப்போது அரசியல் பிரவேசம் என்று தொடர்ந்து கேட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ரஜினி, மற்றவர்களை பார்த்து தாமும் எம்எல்ஏ, எம்.பி ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதில் தவறில்லை ஆனால் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அரசியலுக்கு வர விரும்புபவர்களை நான் அருகில் வைத்துக் கொள்ள மாட்டேன் என்றார்.

ஆண்டவன் கையில்

ஆண்டவன் கையில்

தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் தீர்மானிப்பது ஆண்டவன் தான் என்றும், தான் அரசியலுக்கு வருவதும் ஆண்டவன் கையில் தான்

உள்ளது என்றும் ரஜினி கூறினார். "உடம்பை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மட்டுமே என்னுடைய வேலை,

ஆண்டவனுக்கு நான் ஒரு கருவி, இன்று நடிகன் நாளை அவர் என்னவாக தீர்மானிக்கிறாரோ அதில் நியாயமாக உண்மையாக தர்மத்தடன் பணியாற்றுவேன்" என்றார்.

சிறப்பாக செயல்படுவேன்

சிறப்பாக செயல்படுவேன்

தனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதில் நியாயமாகவும் உண்மையாகவும் தர்மத்துடன் செயல்படுவேன் என்றும் தன்னுடைய வாழ்க்கை கடவுளிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். " ஒருவேறை அரசியல் வரவேண்டிய சூல் ஏற்பட்டால் பணத்தாசை பிடித்தவர்களை கிட்ட கூட சேர்த்துக் கொள்ள மாட்டேன்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாஜவுடன் இணக்கம்

பாஜவுடன் இணக்கம்

நடிகர் ரஜினிகாந்த்தை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கங்கையமரன் சந்தித்து வாழ்த்து பெற்றது, தமிழக பாஜ தலைவர் தமிழிசை, லதா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த்தை சந்தித்தது உள்ளிட்டவை ரஜினி பாஜகவுடன் இணக்கமாக செயல்படுவதாகசொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் ரஜினிகாந்த் அறிவிக்கப்படலாம் என்றும் அரசியல் கிசுகிசுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

மேடையில் பூத்த வெள்ளைத் தாமரை

மேடையில் பூத்த வெள்ளைத் தாமரை

இந்நிலையில் ரஜினிகாந்த் பங்கேற்ற விழா மேடையில் பின்பக்க ஸ்கீரினில் வெள்ளைத் தாமரை மேல் பாபாவின் கதம் கதம் முத்திரை இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜகவுடனான இணக்கத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்து விட்டாரா என்பது கடவுளுக்கும், நடிகர் ரஜினிகாந்த்திற்குமே வெளிச்சம்.

English summary
Superstar Rajinikanth told that his political entry will be decided only by god and his stage banner shows the white lotus with baba's kadam kadam symbol is it a symbolic representation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X