மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த், இன்று இரவு 10 மணிக்கு மும்பையிலிருந்து அமெரிக்கா செல்கிறார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மும்பையில் தொடங்கியது. அங்கு தொடர்ந்து 10 நாட்கள் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினி, பின்னர் சென்னை திரும்பினார். அப்போது தமிழக விவசாய அமைப்பினர், அரசியல் கட்சியினர், அரசியல் பார்வையாளர்கள் என பலரையும் சந்தித்தார்.

Super Star Rajinikanth today night will go to USA

இதனைத் தொடர்ந்து காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் மும்பையில் இருந்து இன்றிரவே அவர் அமெரிக்கா செல்கிறார்.

சில தினங்கள் அங்கு தங்கி மருத்துவ பரிசோதனை செய்துகொள்கிறார். மேலும் அமெரி்க்காவில் நடைபெற உள்ள 2.0 படவிழாவிலும் ரஜினி பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை முடித்துக்கொண்டு மீண்டும் ஜூலை 2வது வாரத்தில் அவர் சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது.

சென்னை திரும்பியதும் அரசியல் கட்சி தொடர்பான ஆலோசனைகளை நடத்துகிறார். ஆகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் சென்னையில் நடைபெறும் காலா படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Super Star Rajinikanth will go to USA for the Medical-check up on today night
Please Wait while comments are loading...