For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அமைச்சரவை இன்று அல்லது நாளை மாற்றியமைக்கப்படக் கூடும் என்று தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 2011ம் ஆண்டு மே மாதம் 16ந் தேதி அதிமுக அரசு பொறுப்பேற்றது. அடுத்து ஜுன் மாதம் 27ம் தேதி தமிழக அமைச்சரவை முதல்முறையாக மாற்றி அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் மொத்தம் 13முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த கே.வி. ராமலிங்கம் நீக்கப்பட்டு புதிய அமைச்சராக சாத்தூர் உதயகுமார் பொறுப்பேற்றார்.

அத்துடன் அமைச்சர்கள் கே.வி., ரமணா, சம்பத், தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோரது அமைச்சரவை பொறுப்புகளும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவின் நால்வரணியாக வருணிக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரின் ஆதிக்கமே அதிமுகவில் ஓங்கி இருப்பதால் இவர்களது கூட்டணியை கலைக்கும் வகையில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றம் என்ற செய்திகள் உலாவரத் தொடங்கியிருக்கிறது. இந்த மாற்றம் இன்று அல்லது நாளை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa may to reshuffle her cabinet on today or tomorrow, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X