2017 நியூஸ்மேக்கர்ஸ்.. எதிர்ப்பார்பை ஏற்றி வானிலையை தெறிக்கவிட்ட வெதர்மேன்! #newsmakers 2017

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை குறித்த முன்னறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் தமிழ்நாடு வெதர்மேன். சமூகவலைதளங்களில் நெட்சன்களின் ரமணனார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான். நமது ஒன் இந்தியா தமிழ் தளம் நடத்திய நியூஸ்மேக்கர் 2017 கருத்துக்கணிப்பிலும் வாக்களித்து அவருக்கு வரவேற்பை தெரிவித்துள்ளனர் மக்கள்.

2017ம் ஆண்டில் செய்திகளில் அதிகம் பேசப்பட்ட நபர்கள் யார், அவர்களுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு என்ன என்பதை அறிய ஒன் இந்தியா தமிழ் தளம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.

நியூஸ்மேக்கர் 2017 என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட அந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இடம்பெற்றிருந்தனர்.

வெதர்மேனுக்கு வரவேற்பு

வெதர்மேனுக்கு வரவேற்பு

அவர்களில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜானுக்கும் மக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். அவருக்கு மக்கள் அளித்துள்ள வாக்குகள் என்ன என்பதை பார்க்கலாம்..

ஃபேஸ்புக் வெதர்மேன்

ஃபேஸ்புக் வெதர்மேன்

ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற தளத்தில் மழை, காற்றழுத்தம் குறித்த தகவல்களை அளித்து வருகிறார் பிரதீப் ஜான். 2015 சென்னையில் கொட்டிய மழை வெள்ளம் குறித்து பதிவிட்டு முன்னறிவிப்பு செய்ததன் மூலம் பிரபலமானார்.

கடந்த ஆண்டும்..

கடந்த ஆண்டும்..

இதேபோல் 2016ஆம் ஆண்டு வர்தா புயலின் போதும் பிரதீப் ஜான் வழங்கிய தகவல்கள் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழையின் போதும் பிரதீப் ஜான் மக்களுக்கு உதவியாக தகவல்களை அளித்து வந்தார்.

துல்லியமான கணிப்புகள்

துல்லியமான கணிப்புகள்

அரசு வானிலை மையங்களை காட்டிலும் துல்லியமாக மழை குறித்த முன்னறிவிப்புகளை கொடுத்தார் பிரதீப் ஜான். அரசியல் தலைவர்களும் பிரதீப் ஜானின் கணிப்பு துல்லியமாக இருப்பதாக புகாழ்ந்தனர்.

நியூஸ்மேக்கர் வெதர்மேன்

நியூஸ்மேக்கர் வெதர்மேன்

இதனால் செய்திகளில் அதிகம் பேசப்பட்டார் பிரதீப் ஜான். அவருக்கு நமது ஒன் இந்தியா தமிழ்தளம் நடத்திய நியூஸ்மேக்கர் 2017 கருத்துக்கணிப்பிலும் வாக்களித்து வரவேற்பை தெரிவித்துள்ளனர் மக்கள். ஃபேஸ்புக் பக்கத்திலும் பிரதீப் ஜானை ஏராளமான மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu weatherman is one of the news makers of the year 2017. One India Tamil has conducted a survey about the news makers of the year 2017. Public has voted for Tamilnadu weatherman.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற