"வைத்தியநாதனை"ப் பார்க்கப் போகனும்.. அதுக்கு முன்னால "கேசவனை"ப் பார்க்கனும்…!
சென்னை: இந்திப் பிரச்சினை இப்போது தலைவிரித்தாடி வருகிறது. இந்த நேரத்தில் ஆங்கிலத்திற்கும், அன்னைத் தமிழுக்கும் உள்ள சில சுவாரஸ்ய சமாச்சாரம் குறித்த ஒரு ஆய்வுக் கண் பார்வை இது...
நம்மவர்களில் பலரின் பெயர்கள் குறிப்பிட்ட தொழிலைக் குறிப்பதாக இருக்கும். அதேசமயம், சிலரின் பெயர்களைப் பார்த்தால் உடல் ஆரோக்கியம், நிறம் குறித்ததாக இருக்கும்.
இதெல்லாம் பழைய சமாச்சாரம்தான். ஆனால் ஆங்கிலக் கலப்பில்லாமல் நாம் பேச வேண்டும், எழுத வேண்டும் என்று நினைக்கும்போது சில பெயர்களைப் பார்த்தால் ஆங்கிலத்தில் புழங்கும் சொற்றொடர்கள் அல்லது ஆங்கில சொற்களின் சாயலில் இருப்பது சுவாரஸ்யமானதுதானே.. அதைத்தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

வைத்தியநாதன்
டாக்டர் என்ற வார்த்தைக்கு வைத்தியநாதன் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். வைத்தியநாதன் என்பது நம்மவர்களிடையே காலம் காலமாக புழங்கி வரும் பெயரும் கூட.

பல்லவன்
பல் சற்று எடுப்பாக இருப்பவர்களை சிலர் இந்தப் பெயரில் செல்லமாக அழைப்பதுண்டு. பல் டாக்டர்களைப் பார்த்து பல்லவன் என்று சொல்வோரும் உண்டு

கேசவன்
கேஸ் என்றால் வழக்கு.. வழக்கை வாதிடுபவர் வக்கீல் அல்லது வழக்கறிஞர். கேசவன் என்றாலும் அந்தப் பொருள் வருவது இயல்பாகத்தான் தெரிகிறது.

தனசேகரன்
தனம் என்றால் பொருள், நிதி என்று பொருள். நிதி கொடுப்பவர் பினான்ஷியர்.. அவரை தனசேகரன் என்று கூட செல்லமாக கூறலாமே..

இருதயராஜ்
இருதவியல் நிபுணரையும் கூட இதே பெயரில் செல்லமாக அழைக்கலாம்.

குழந்தைச்சாமி
பீடியாட்ரிட்ஸ்ட் என்றால் குழந்தைகள் நல நிபுணர்.. குழந்தைச்சாமி என்று கூட கூறலாம்.. குழந்தைத்தனமாக அது பார்க்கப்படாவிட்டால்!.

கல்யாணசுந்தரம்
கல்யாண சுந்தரம்.. பட் நோ கல்யாணம் என்று ஒரு படத்தில் வடிவேலுவை வெள்ளைக்காரப் பெண் ஒருவர் கலாய்ப்பார்.. கல்யாண புரோக்கர்களை அல்லது ஆலோசகர்களை கூட கல்யாண சுந்தரம் என்று செல்லமாக அழைக்கலாம்.

கண்ணாயிரம்
கண் டாக்டருக்கு இப்படிச் செல்லப் பெயர் வைத்திருப்பவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

சக்கரபாணி
இது சத்தியமாக பெயர்தான். ஆனால் சர்க்கரை வியாதி மருத்துவர்கள் சிலரை இப்படியும் செல்லமாக கூறுவோர் உண்டுதான்.

ஆரோக்கியசாமி
ஆரோக்கியம் என்றால் உடல் நலம்.. உடல் நலம் என்றால் சரிவிகித சமானமான உணவை எடுத்துக் கொள்வபருக்கு அது சாத்தியப்படும். ஊட்டச் சத்து நிபுணர்களைக் கூட ஆரோக்கியசாமி என்று அழைக்கலாம்..

சொக்கலிங்கம்
சொக்க வைப்பவர் அதாவது மயக்க நிலையில் ஆழ்த்துபவரை அதாவது ஹிப்னாடிஸ்ட்டைக் கூட சொக்கலிங்கம் என்று செல்லமாக அழைக்கலாம்.. அவர் கோப்பபடாவிட்டால்.

மாத்ருபூதம்
பெயரே பயங்கரமாக இருக்கிறதல்லவா.. கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை மாத்ருபூதம் என்றால் விவேக் புண்ணியத்தில் "வேறு" மாதிரியாகத்தான் பலரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உண்மையில், "எக்ஸார்சிஸ்ட்"டுகளைத்தான் இப்படி நாம் கூப்பிட வேண்டும்.

மாயாண்டி
மாயக் கலை அறிந்தவர் மாஜிக் மேன் அதாவது மாஜிஷியன்.. தமிழில் அதற்கு அழகான பெயராக மாயாண்டி என்பது தெரிகிறது...

செங்கல்வராயன்..
கண்டிப்பாக கேலி செய்வதற்காக இதைச் சொல்லவில்லை.. ஒரு பில்டரைப் பார்த்து இந்தப் பெயரில் செல்லமாக அழைக்கலாம் போலத்தான் தோன்றுகிறது.

கார்மேகம்
எஸ்.ஆர்.ரமணனுக்கு பலர் இந்தப் பெயரை ஏற்கனவே வைத்து விட்டனர். மெட்டீயோராலஜிஸ்ட் அதாவது தட்பவெப்பநிலை குறித்து சொல்வபவர்களை தாராளமாக கார்மேகம் என்று செல்லமாக கூப்பிடலாம்.

பச்சையப்பன்
பச்சையப்பன்.. அழகான தமிழ்ப் பெயர்.. விவசாயத்தல் ஈடுபடுவோருக்கு முற்றிலும் பொருத்தமான பெயர் இது.

புஷ்பவனம்
எல்லோருக்கும் உடனே புஷ்பவனம் குப்புசாமி ஞாபகம்தான் வரும். ஆனால், தோட்டக்கலை நிபுணர்களைக் கூட இப்படிச் செல்லமாக கூப்பிடலாம்.

பூமிநாதன்
லேன்ட்ஸ்கேப்பர்களை இப்படியும் பெயர் வைத்துச் சொல்லலாம். அவர்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால்.

மது சூதன்
பெயரிலேயே பாதி "மேட்டர்" புரிந்திருக்கும். பார்களுக்குப் போவோரையும், மது அருந்துவோரையும், மதுக் கடைகளில் பணியாற்றுவோரையும் மது சூதன் என்று அழைப்பதில் தவறில்லை போலத்தான் தோன்றுகிறது.

பால்ராஜ்
பால் விற்பவர்களைப் பார்த்து பால்ராஜ் என்றால் அவர்கள் சத்தியமாக கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புவோம். ஒருவேளை அவரது பெயரே கூட அதுவாக இருந்தால் இன்னும் சவுகரியம்.

நாயகன்
இது கமல்ஹாசன் படம் இல்லை சாரே.. நாய் வளர்ப்பவர்களை இப்படி டீசன்ட்டாக கூப்பிட்டுப் பார்க்கலாம்.

தாண்டவராயன்…
கையில் பெரிய கம்புடன் ஓடி வந்து ஜம்ப் செய்து மேலே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கட்டையைத் தாண்டுவார்களே .. அதுதாங்க போல்வால்ட்.. அவர்களை தாண்டவராயன் என்று சொல்லலாம்தானே.!

அப்டீன்னா அவரு பேரு.?
அதையே ஜாவலின் துரோ செய்பவராக இருந்தால் வேலாயுதம் என்று கூப்பிட்டு விட்டுப் போக வேண்டியதுதான்.

அப்ப.. பலராமன்?
அப்படியென்றால் வலு தூக்கபவருக்குச் செல்லப் பெயர் பலராமன்.

சரி .. குண்டு ராவ்?
சுமோ மல்யுத்த வீரரை குண்டு ராவ் என்று கூப்பிடலாம்.. அவர் கோபித்துக் கொள்ளாவிட்டால்.

எத்திராஜ்…
கால்பந்து வீரரை அப்படிக் கூப்பிடலாம். அவர்தானே பந்தை எத்தி எத்தி உதைத்து விளையாடுகிறார்.

பால திருப்புற சுந்தரி..!
ஒரிஜினல் பெயர் என்னவோ பால திரிபுர சுந்தரிதான்.. ஆனால் இவர்தான் பெண் சுழற்பந்து வீச்சாளராச்சே.. அதான் பெயரை இப்படித் திருப்பிட்டாங்க போல...!
இதெல்லாம் ஜாலிக்காகத்தான்.. யாரையும் புண்படுத்துவோ. கிண்டலடிக்கவோ அல்ல..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications