5வது நாளாக நீடிக்கும் பஸ் ஸ்டிரைக்... பணிச்சுமையால் திணறும் தற்காலிக ஊழியர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் ? போராட்டம் எதனால் ?- வீடியோ

  திருநெல்வேலி: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் 5வது நாளாக நீடிப்பதால் தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடந்துராக பணியமர்த்தப்பட்டவர்கள், பணிச்சுமையால் மிகுந்த சிரமத்திற்று ஆளாகியுள்ளனர். பயணிகளின் நெரிசல், பராமரிப்பின்றி இருக்கும் வாகனங்களே அவர்களின் பணிச்சுமைக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இழுபறியில் இருந்து வருகிறது.

  Temporary workers in transport department also in trouble of overload work stress

  போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதியம் ரூ.19500 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.7 ஆயிரம் கோடியை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து முடங்கியதால் பயணிகளின் நலன் கருதி தற்காலிக பணியாளர்களை வைத்து பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

  ஆனால் இதில் பல பேருந்துகள் சரியாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் அந்த பஸ்களை இயக்க தற்காலிக பணியாளர்கள் திணறி வருகின்றனர். மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களையும் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதில் கட்டணங்களை கூடுதலாக வசூல் செய்வதால் பயணிகளிடம் வாங்கி கட்டி கொண்டு வருகின்றனர்.

  வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிரைவர் பயிற்சி முடித்த பல லட்சம் பேர் காத்திருக்கும் போது அவர்களை ஏன் இதில் பயன்படுத்த கூடாது. ஏற்கனவே போதுமான சம்பளம் வழங்கப்படும் போது கூடுதல் சம்பளம் கொடுத்தால் இப்படிதான் நஷ்டப்பட வேண்டும். இனியாவது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நீண்ட காலம் காத்திருப்போருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilnadu is suffering due to continuous fifth day strike of transport union and the temporary workers also in trouble of overload work.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற