ஜெ. சிகிச்சை வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ காட்சி

  சென்னை: ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

  டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் வெற்றிவேல். இவர் ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

  தேர்தலுக்கு முந்தைய நாள் வெளியிடப்பட்ட இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

  விசாரணை கமிஷன் புகார்

  விசாரணை கமிஷன் புகார்

  இதைத்தொடர்ந்து ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் போலீசில் புகார் அளித்தது.

  தன்னிச்சையாக வீடியோ வெளியீடு

  தன்னிச்சையாக வீடியோ வெளியீடு

  வெற்றிவேல் தன்னிச்சையாக வீடியோவை வெளியிட்டிருப்பது விசாரணை ஆணையத்தை அவமதிக்கும் செயல் என்றும் வீடியோவை விசாரணை ஆணையத்திடம் வழங்காமல் வெளியிட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்திருந்தது.

  நிபந்தனை முன்ஜாமீன்

  நிபந்தனை முன்ஜாமீன்

  இதையடுத்து முன்ஜாமீன் கோரி வெற்றிவேல் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வெற்றிவேலுவின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

  காவல்நிலையத்தில் கையெழுத்து

  காவல்நிலையத்தில் கையெழுத்து

  தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் 2 வாரம் தினமும் காலை 10.30 மணிக்கு அண்ணாசதுக்கம் காவல்நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The Chennai high court issues conditional anticipatory bail for Vettrivel. Vettrivel released Jayalalitha treatment video one day before of RK Nagar by poll.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற