பெரும்பான்மையை இழந்த அதிமுக அரசு பதவி விலக வேண்டும்.. திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும்பான்மையை இழந்துவிட்ட அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இதுகுறித்து விவாதிக்க அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெகிறது.

இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

காற்றில் கரைந்த கற்பனை

காற்றில் கரைந்த கற்பனை

அதன்படி 2ஜி மூலம் பல லட்சம் கோடி இழப்பு தொடரப்பட்ட வழக்கு பொய்யானது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2ஜி மாயவி காற்றில் கரைந்த கற்பனை கணக்கு என்றும் திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பணத்தின் மூலம் வெற்றி

பணத்தின் மூலம் வெற்றி

மேலும் ஆர்கே நகரில் தேர்தலில் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தின் மூலம் வெற்றி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக அரசு பதவி விலகவேண்டும்

அதிமுக அரசு பதவி விலகவேண்டும்

மேலும் பெரும்பான்மையை இழந்துவிட்ட அதிமுக அரசு பதவி விலக வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனியும் அதிமுக அரசு தொடருவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும் திமுக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.13,520 கோடி நிதி

ரூ.13,520 கோடி நிதி

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழக அரசுக்கு புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு 13,520 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பணியாற்ற தவறி நிர்வாகிகள்

பணியாற்ற தவறி நிர்வாகிகள்

மேலும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணியாற்ற தவறிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The DMK High Command Committee Meeting has been started in Chennai Anna Arivalayam. DMK working president Stalin initiats this meeting. RK defeat also discussing in this meet. Five resolutions passed in this meeting. As it the ADMK govt lost majority and should resign DMK passed resolution.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற