சென்னையில் இன்றும் ஜில்லுன்னு மழை பெய்யுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்றும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்றிரவு விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. பலத்த காற்று இடி மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

There is a possibility of rain or heavy rainfall in the northern Tamil Nadu and southern Tamil Nadu: Chennai Meteorological center

காலை முதலே நகரின் பெரும்பாலான பகுதி மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதகாவும் வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர், செம்பரப்பாக்கம் பகுதிகளில் 9 செ.மீ., பூந்தமல்லி 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

வெப்பசலனம் மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசிய காற்றின் வேகத்தாலேயே நல்ல மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai Meteorological center says that there is a possibility of rain or heavy rainfall in the northern Tamil Nadu and southern Tamil Nadu. The Meteorological center said rainfall will continue today also in Chennai.
Please Wait while comments are loading...