அடித்து வெளுக்கும் மழை.. சென்னைவாசிகள் இந்த எமெர்ஜென்சி பொருட்களை ரெடியாக வைத்துக்கொள்ளவும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மழை கொட்டி வருகிறது. இதையடுத்து 2 வருடங்கள் முன்பு ஏற்பட்ட நிலை வந்துவிட கூடாது என்பதில் மக்கள் இப்போதே கவனமாக இருக்க தொடங்கிவிட்டனர்.

#ChennaiRains என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. மழை பெய்து, வெள்ளம் வந்தால் தேவைப்படும் முக்கிய பொருட்கள் இவைதான் என்று மெசேஜ் ஒன்று சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 These are the precautions one should to take before Chennai rains

அவை இந்த பொருட்கள்தான்.

1. டார்ச் லைட், மெழுகுவர்த்தி, சார்ஜர் லைட் தயாராக வையுங்கள். எண்ணெய் தீபம், லாந்தர், சிம்னி விளக்குகளும் நல்லது.

2. இன்வெர்ட்டர் வைத்திருப்பவர்கள் அதை சேமியுங்கள். பவர்பேங்க் வைத்துக்கொள்ளுங்கள்.

3. வெளியே செல்லும்போது குடை, நீர் புகா பைகள் எடுத்துச் செல்லலாம்.

4. சுவற்றில் சிறு சிறு ஓட்டைகளை அடையுங்கள்.

5. நீர் வெளியேறும் சிறு வழித்தடங்களையும் சீராக்குங்கள்.

6. மரத்தடியில் நிற்காதீர்கள். மரமுள்ள சாலைகளில் காற்று, மழையின்போது பயணம் செய்யீதீர்கள்.

7. நீர் செல்லும் சாலையில் செல்லும்போது கையில் நீண்ட குச்சியை வைத்துக் கொண்டே ஊன்றி குழி உள்ளதா என பார்த்து செல்லலாம்.

8. மின் சாதனங்களை மரம் அல்லது ரப்பர் செருப்பை பயன்படுத்தி கையாளுங்கள்.

9. மின்சாரம் இல்லையென்றால் பால் நிறைய வாங்கி காய்ச்சி வைத்துக் கொள்ளலாம்.

10. தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம்.

11. ஏடிஎம்களில் ஒரு வாரத்திற்கு அடிப்படை தேவைக்கான பணம் எடுத்து வையுங்கள்.

12.எளிதில் அழுகிவிடாத காய்கறிகள், ட்ரை ப்ரூட்கள், பிஸ்கட்டுகள் ஸ்டாக் வைத்துக்கொள்ளலாம்.

13. எல்லாம் தயாராக வைத்துக்கொண்டு மழையை ரசியுங்கள். மழை நல்லது.

இவ்வாறு வைரலாக மெசேஜ்கள் சுற்றுகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
These are the precautions one should to take before Chennai rains, says Netizens.
Please Wait while comments are loading...